பட்டினப்பாக்த்தில் கடல் அரிப்பால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை பட்டினம்பாக்த்தில் கடல் சீற்றத்தால் கரையில் இருந்த பலர் தங்களது இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பட்டினம்பாக்கம், எண்ணூர் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கடல் சீற்றத்திற்கு இரையாகி உள்ளன. பட்டினபாக்த்தில் உள்ள பல வீடுகளில் புகுந்த கடல் நீர்  இது வரை வெளியேறவில்லை. கடல் அரிப்பினை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடல் அரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட பட்டனம்பாக்கத்திற்கு வருகை தந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அவர் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். மேலும் கடல் அரிப்பினால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.