மைலேஜ் மகாராஜாக்கள்... உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும் டாப் 5 பைக்குகள்

High Mileage Bikes In India: இந்திய சந்தையில் அதிக மைலேஜ் தரும் வெவ்வேறு நிறுவனங்களின் டாப் 5 பைக்குகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். இவை அனைத்தும் 65 கி.மீ.,க்கு மேல் மைல்ஜே தரும்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 10, 2024, 09:29 PM IST
  • பஜாஜ் நிறுவனம் இதில் முன்னணியில் இருக்கிறது.
  • மைலேஜ் பார்த்துதான் அனைவரும் பைக் வாங்குவார்கள்.
  • அதிக மைலேஜ் தரும் பைக் உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும்.
மைலேஜ் மகாராஜாக்கள்... உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும் டாப் 5 பைக்குகள்

High Mileage Bikes In India: இப்போது பைக் வாங்குவது நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அலுவலக வேலைகள் தொடங்கி தினமும் நீண்ட தூரத்திற்கு பயணப்படுதற்கு பைக் தான் முதன்மையான போக்குவரத்து ஆப்ஷனாக இருக்கிறது. கூட்டமின்றி, போக்குவரத்து நெரிசல் பிரச்னையின்றி, தனியாகவோ அல்லது இரண்டு பேரோ சேர்ந்து செல்ல அது அவசியமான ஒன்றாக உள்ளது.

Add Zee News as a Preferred Source

இதனால் பைக் விற்பனை இந்தியாவில் உயர்ந்து கொண்டு வருகிறது. ஆட்டோமொபைல் சந்தையில் புதுப் புது மாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இருப்பினும் மக்கள் குறைவான விலையில் அதுவும் நல்ல மைலேஜ் தரும் பைக்கை வாங்கவே அதிகம் திட்டமிடுகின்றனர். பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு நல்ல மைலேஜ் தரும் பைக்கை வாங்க பலரும் முனைப்பு காட்டுகிறார்கள். அந்த வகையில், இந்திய சந்தையில் அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள் குறித்து விரிவாக காணலாம்.

1. ஹோண்டா

ஹோண்டா நிறுவனத்தின் CD 110 Dream Deluxe. ஜப்பானிய தாயரிப்பான இதில் ESP தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது சத்தமே இருக்காது. இந்த பைக்கிற்கு 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த பைக்கில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 65 கி.மீ., வரை செல்லலாம். ஷோரூம் செலவுகள் இல்லாமல் இது 74,401 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

மேலும் படிக்க |  டிசம்பர் மாதம் கார், பைக் வாங்காதீங்க! உங்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும்!

2. பஜாஜ்

பஜாஜ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Freedom 125 பைக் தான், இந்தியாவின் CNG வாயு மூலம் இயங்கும் முதல் பைக் மாடலாகும். இதன் விலை தற்போது ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1.09 வரை விற்கப்படுகிறது. இதில் ஷோரூம் கட்டணம் அடக்கமில்லை. 125cc எஞ்சின் கொண்ட இந்த பைக்கில் CNG மற்றும் பெட்ரோல் இரண்டு வசதிகளும் உள்ளது. இதன் மைலேஜ் 65 kmpl என கூறப்படுகிறது.

3. ஹீரோ

ஹீரோ நிறுவனத்தின் Splendor Plus பைக் மைலேஜில் கில்லாடி எனலாம். இதன் விலை ரூ.74,441 முதல் ரூ.78,286 ஆக உள்ளது. இதன் எஞ்சின் 100cc மற்றும் i3 தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80.6 கி.மீ., மைலேஜ் தருகிறது.

4. டிவிஎஸ்

டிவிஎஸ் நிறுவனத்தின் Star City Plus ரூ.75,541 முதல் ரூ.78,541 ஆக உள்ளது. இதன் ETFi தொழில்நுட்பம் 15% வரை எரிபொருளை சேமிக்க உதவுகிறது. இதன் எட்சின் 110cc ஆகும். இந்த பைக் 86 கி.மீ., மைலேஜ் தருகிறது.

5. பஜாஜ்

பஜாஜ் நிறுவனம் என்றாலே மைலேஜ் பைக்குகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் ஒன்று. அந்த வகையில், இந்த லிஸ்டில் இது இரண்டாவது பஜாஜ் பைக் ஆகும். பஜாஜ் Platina 110 பைக்கின் விலை ரூ.71,354 ஆக உள்ளது. இந்த பைக் 70 kmpl மைலேஜ் தருகிறது.

மேலும் படிக்க |  EMI-ல் டூவீலர் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களை நியாபகம் வச்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News