BSNL Long Term Validity Recharge Plan: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனத்திற்கு டக்கர் தரும் அளவிற்கு தற்போது பிஎஸ்என்எல் மக்களை கவரும் விதமாக பல ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஆண்டு முழுவதும் இருக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் இதில் அடங்கும். பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகம் படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 600 ஜிபி டேட்டா வழங்கப்படும். தற்போது இந்தத் திட்டத்தைப் பற்றிய முழுமையாக இந்த பதிவில் காணலாம்.
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் பலனை அனுபவிக்கலாம்:
இந்நிலையில் தற்போது நாம் இங்கு காணப் போகும் BSNL ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.1,999 ஆகும். இது நிறுவனத்தின் நீண்டகால வேலிடிட்டி திட்டமாகும். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டிவுடன் வருகிறது. அதாவது ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும் ஆண்டு முழுவதும் இலவச சேவையை பெறலாம்.
மேலும் படிக்க | Reliance Jio... 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட... மலிவான சில சூப்பர் திட்டங்கள்
ரூ.1,999 ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்:
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், BSNL பயனர்கள் வருடம் முழுவதும் இலவச அன்லிமிடெட் அழைப்பின் வசதியைப் பெறலாம். இதனுடன் பயனர்கள் 365 நாட்களுக்கு தினம்தோறும் 100 SMS வசதியையும் பெறுவார்கள். இந்த திட்டத்தில் பயனர்கள் இணைய பயன்பாட்டிற்காக 600 ஜிபி தரவைப் பெறுவார்கள். தரவு வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40 kbps ஆகக் குறைக்கப்படும்.
இந்தப் பயனர்களுக்கு சிறந்த திட்டம்:
இந்தத் திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், BSNL வலைத்தளம், BSNL சுய பராமரிப்பு பயன்பாடு அல்லது PhonePe, Google Pay போன்ற ஆன்லைன் கட்டண பயன்பாடுகள் மூலம் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். தரவு மற்றும் அழைப்பு வசதிகள் இரண்டையும் வழங்கும் ஒரு வருட செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கும்.
இதனிடையே சமீபத்தில் தான் பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை வலுப்படுத்த 75,000 புதிய 4ஜி மொபைல் கோபுரங்களை நிறுவியுள்ளது, இது அரசு தொலைத்தொடர்பு சேவையின் இணைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் 1 லட்சம் 4G கோபுரங்களை நிறுவும் இலக்கை நிறுவனம் அடையப் போகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 4G சேவைகளை தொடங்க BSNL தயாராகி வருகிறது. இதனுடன், நிறுவனம் 5G தொழில்நுட்பத்தையும் சோதிக்கத் தொடங்க உள்ளது. வரும் காலங்களில், பயனர்கள் BSNL இன் 4G மற்றும் 5G சேவைகளை அனுபவிக்க முடியும்.
மேலும் படிக்க | மிரள வைக்க வருகிறது Realme P3.. போன் விலை குறித்த விவரங்கள் கசிவு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









