UHD Smart TV: வெறும் ரூ. 7,000-க்கு 42 இஞ்ச் அசத்தல் ஸ்மார்ட் டிவி!!

UHD Smart TV: அல்ட்ரா எச்டி டிவி வாங்கும் ஆசை இருந்தாலும், உங்கள் பட்ஜெட் அதற்கு இடமளிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 6, 2023, 07:48 AM IST
  • இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
  • ஆகையால் இறக்குமதி வரி போன்றவற்றை இவற்றுக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை,
  • இவை மிகவும் மலிவு விலையில் விற்கப்படுவதற்கு இதுவே காரணமாகும்.
UHD Smart TV: வெறும் ரூ. 7,000-க்கு 42 இஞ்ச் அசத்தல் ஸ்மார்ட் டிவி!!  title=

UHD ஸ்மார்ட் டிவி: ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! பொதுவாக அல்ட்ரா எச்டி டிவியை வாங்குவது சில நேரங்களில் பலரின் பட்ஜெட்டில் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். அல்ட்ரா எச்டி டிவி-கள் சாதாரண ஸ்மார்ட் டிவியிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாகும். மேலும் இவை மிக நேர்த்தியான, அடுத்த நிலையிலான காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலையும் மிக அதிகமாக இருக்கும்.

வாடிக்கையாளர்கள் 32 அங்குல அளவில் அல்ட்ரா எச்டி டிவி-ஐ வாங்கினால், அதற்கு சுமார் ரூ. 17,000 முதல் ரூ. 20,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். 42 அங்குல அல்ட்ரா எச்டி டிவி-க்கு ரூ. 25,000 முதல் ரூ. 40,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். நிறுவனத்தைப் பொறுத்து அதன் விலை மாறுபடலாம்.

அல்ட்ரா எச்டி டிவி வாங்கும் ஆசை இருந்தாலும், உங்கள் பட்ஜெட் அதற்கு இடமளிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அல்ட்ரா எச்டி டிவியை 32 இன்ச் டிவி-யின் விலையை விட குறைவான விலைக்கு வாங்க முடியும். இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக காணலாம். 

மேலும் படிக்க | ஜியோ கொடுத்த மெகா சர்பிரைஸ்..! ரூ.299 பிளானில் இதுவரை இல்லாத அம்சங்கள்..!

மலிவான அல்ட்ரா எச்டி டிவி எங்கே கிடைக்கும்?

நீங்கள் பிராண்டட் அல்ட்ரா எச்டி டிவியை வாங்கினால், ஆரம்ப விலையாக ரூ. 40,000 வரையிலான ஆரம்ப தொகையை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் மறுபுறம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்ட்ரா எச்டி டிவியை வாங்கினால், இதற்கு நீங்கள் ரூ. 7000 என்ற துவக்க தொகையை செலுத்தினால் போதும். 

இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆகையால் இறக்குமதி வரி போன்றவற்றை இவற்றுக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை, மேலும் அவை மிகவும் மலிவு விலையில் விற்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். அல்ட்ரா எச்டி டிவிகள் உங்களுக்கு அடுத்த நிலை காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இதில் நீங்கள் யதார்த்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.

இந்த சிறப்பம்சம் என்னவென்றால், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்ட்ரா எச்டி டிவிகளில் பல அம்சங்களைக் காணலாம். இதில் முன்பே நிறுவப்பட்ட சமூக ஊடக பயன்பாடுகள், அத்துடன் டால்பி சவுண்ட் மற்றும் டால்பி விஷன் போன்ற அம்சங்கள் அடங்கும். உங்கள் அனுபவத்தை இன்னும் மேம்படுத்தும் அம்சங்களை இந்த டிவி-யில் பெறுவீர்கள். 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்ட்ரா எச்டி டிவி பழுதடைந்து அதன் பேனலை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த டிவி இந்தியாவில்தான் தயாரிக்கப்படிகின்றது என்பதால், அதற்கு நீங்கள் மிகவும் சிறிய தொகையை செலுத்தினால் போதுமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இயர்பட்ஸ்களை என்ன விலையில் வாங்கலாம்...? - அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News