Offer: சலுகை விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார்

இந்த மையங்களில் அனைத்து பொருட்களும் வெளி சந்தையை விட குறைவான விலையில் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2021, 11:39 AM IST
Offer: சலுகை விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார் title=

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்காக மிலிட்டரி கேண்டீன் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் பல்பொருள் விற்பனை மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் அனைத்து பொருட்களும் வெளி சந்தையை விட குறைவான விலையில் கிடைக்கும். 

அந்தவகையில் தற்போது நிஸான் (Nissan) கார் நிறுவனத்தின் கிக்ஸ், டட்சன் ரெடிகோ, மேக்னைட், கோ மற்றும் கோ ப்ளஸ் ஆகிய கார் (Cars) மாடல்கள் கார்களை ராணுவ கேன்டீன்களில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 

ALSO READ | புதிய கார்களில் 3 லட்சம் வரை பம்பர் தள்ளுபடி: அதிக சலுகை உள்ள கார்களின் பட்டியல் இதோ

இந்த கார்களின் விவரம் இங்கே பார்போம்:

1. நிஸான் மேக்னைட்: நிஸான் மேக்னைட் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. சாதாரண பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், டர்போ பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். வெளிசந்தையைவிட ரூ.1.54 லட்சம் குறைவான விலையில் இங்கே நீங்கள் இந்த காரை வாங்கலாம். 

2. நிஸான் கிக்ஸ்: நிஸான் கிக்ஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதில், 1.5 லிட்டர் எஞ்சின் மாடல் குறைவான விலை தேர்வாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஒரேயொரு வேரியண்ட்டில் ராணுவ கேன்டீனில் கிடைக்கும். 

3. டட்சன் கார்கள்: 
டட்சன் நிறுவனத்தின் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் இங்கு விற்பனைக்கு கிடைக்கும். ரெடிகோ கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி வேரியண்ட்டுகளிலும், கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ALSO READ | உங்ககிட்ட இந்த கார் இருக்கா? Maruti, Tata Motors, Toyota வாடிக்கையாளர்களுக்கு good news!!

Trending News