ரூ. 16,999 விலையில் Realme P3 அறிமுகம்.. மாஸ் காட்டும் அம்சங்கள்

Realme P3 மற்றும் P3 Ultra ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு போன்களின் விலையும் வேறுபட்டவை.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 19, 2025, 02:49 PM IST
  • ரியல்மி இன்று இந்தியாவில் P3 மற்றும் P3 அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது
  • P3 அல்ட்ராவின் விலை ரூ.26,999 முதல் தொடங்குகிறது
  • P3 அல்ட்ரா மார்ச் 26 முதல் விற்பனைக்கு கிடைக்கும்
ரூ. 16,999 விலையில் Realme P3 அறிமுகம்.. மாஸ் காட்டும் அம்சங்கள்

Realme நிறுவனமானது தற்போது தனது புதிய ஸ்மார்ட்போன் அதாவது Realme P3, P3 Ultra ஸ்மார்ட்போனை தற்போது இன்று அறிமுகம் படுத்தி உள்ளது. P3 வேரியண்டின் விலை ரூ.16,999 இல் தொடங்குகிறது. அதே நேரத்தில், Ultra வேரியண்டின் விலை ரூ.26,999 முதல் தொடங்குகிறது. வெண்ணிலா வேரியண்டை மேம்படுத்தும் விதமாக, P3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 4 சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மறுபுறம், Realme P3 Ultra ஆனது MediaTek Dimensity 8350 Ultra சிப் மூலம் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரத்தை இங்கே காணலாம். 

Add Zee News as a Preferred Source

Realme P3, P3 Ultra: விலை
அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் Realme P3-யின் விலை, விற்பனை தேதிகள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளை Realme அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 

-- 6GB RAM and 128GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 16,999
-- 8GB RAM and 128GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 17,999
-- 8GB RAM and 256GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 19,999

மேலும் படிக்க | JioHotstar... ரூ.100 போதும்... கிரிக்கெட், வெப் சீரிஸ், சினிமா எல்லாம் கண்டு ரசிக்கலாம்

இதனிடையே நிறுவனம் ரூ.2,000 வங்கிச் சலுகையையும் இதில்  வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு முதல் தொடங்கும். முதல் விற்பனையானது மார்ச் 26 முதல் தொடங்குகிறது, மேலும் இந்த போன் Realme ஸ்டோர் செயலி, Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

Realme P3 Ultra பற்றி பேசுகையில் நிறுவனம் இந்த போனை ரூ.26,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 

-- 8GB RAM and 128GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 26,999
-- 8GB RAM and 256GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 27,999
-- 12GB RAM and 256GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 29,999

இதனிடையே மூன்று வகைகளிலும் ரூ.2,000 வங்கி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். 

Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:
அறிமுகத்திற்கு முன்பே, நிறுவனம் Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்களை வெளியிட்டுள்ளது-
• புரொசர்: Qualcomm Snapdragon 6 Gen 4 சிப்செட்
• பேட்டரி: 6,000mAh பேட்டரி + 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
• டிஸ்ப்ளே: 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் AMOLED பேனல்
• ப்ரோடெக்ஷன்: IP69 சர்டிஃபிகேஷன் (தூசி மற்றும் நீர் பாதுகாப்பு)
• ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்: 6GB/128GB, 8GB/128GB, 8GB/256GB

மேலும் படிக்க | SpaceX Starlink... இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை எப்போது தொடங்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News