மிரள வைக்க வருகிறது Realme P3.. போன் விலை குறித்த விவரங்கள் கசிவு..

Realme P3 ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்கு முன்னதாக போன் விலை குறித்த விவரங்கள் கசிந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 18, 2025, 12:37 PM IST
  • 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ.16,999
  • 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ.17,999
  • 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் – ரூ.19,999
மிரள வைக்க வருகிறது Realme P3.. போன் விலை குறித்த விவரங்கள் கசிவு..

Realme நிறுவனமானது தற்போது தனது புதிய ஸ்மார்ட்போன் அதாவது Realme P3 அறிமுகம் படுத்த உள்ளது. இதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை தேதி மற்றும் அம்சங்கள்  தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம். இனிடையே இந்த ஸ்மார்ட்போன் நாளை அதாவது மார்ச் 19 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஸ்பேஸ் சில்வர், காமெட் கிரே, நெபுளா பிங்க் கலர்கள் உள்ளன. இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999 ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 அறிமுக சலுகை போக ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Realme P3: இந்தியாவில் விலை மற்றும் வெரியண்ட்ஸ்
ரியல்மி பி3 மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியா டுடே அறிக்கையின்படி, அவற்றின் விலை பின்வருமாறு:
6GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ.16,999
8GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ.17,999
8GB RAM + 256GB ஸ்டோரேஜ் – ரூ.19,999

மேலும் படிக்க | JioHotstar... ரூ.100 போதும்... கிரிக்கெட், வெப் சீரிஸ், சினிமா எல்லாம் கண்டு ரசிக்கலாம்

இருப்பினும், வங்கி கொடுக்கும் சலுகையின்படி, வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடி இதில் வழங்கப்படும், அந்த வகையில் இதன் விலை:

• 6GB + 128GB வெரியண்ட்ஸ் – ரூ.14,999
• 8GB + 128GB வெரியண்ட்ஸ் – ரூ.15,999
• 8GB + 256GB வெரியண்ட்ஸ் – ரூ.17,999

இந்த வங்கி சலுகை எந்த வங்கிகளுக்கு பொருந்தும் என்பது தற்போது தெரியவில்லை, எனினும் இது தொடர்பான முழு விவரம் நாளை அறிவிக்கப்படும். முகப்படுத்தப்பட்ட இந்த சலுகை "முன்கூட்டியே முன்பதிவு செய்யும் சலுகை" என்பதன் கீழ் வழங்கப்படுகிறது.

Realme P3 விற்பனை விவரம்:
Realme P3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நாளை மார்ச் 19 ஆம் தேதி மாலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். இந்த ஸ்மார்ட்போனை Realme இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தின் மூலம் வாங்கலாம்.

Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:
அறிமுகத்திற்கு முன்பே, நிறுவனம் Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்களை வெளியிட்டுள்ளது-
• புரொசர்: Qualcomm Snapdragon 6 Gen 4 சிப்செட்
• பேட்டரி: 6,000mAh பேட்டரி + 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
• டிஸ்ப்ளே: 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் AMOLED பேனல்
• ப்ரோடெக்ஷன்: IP69 சர்டிஃபிகேஷன் (தூசி மற்றும் நீர் பாதுகாப்பு)
• ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்: 6GB/128GB, 8GB/128GB, 8GB/256GB

மேலும் படிக்க | SpaceX Starlink... இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை எப்போது தொடங்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News