தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி : இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Free Technical Training : தமிழ்நாடு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல சலுகைகளுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி வழங்குகிறது. இதற்கு ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 20, 2025, 07:39 PM IST
  • தமிழ்நாடு அரசின் இலவச தொழில்நுட்ப பயிற்சி
  • 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி இருந்தால் போதும்
  • மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்
தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி : இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Free Technical Training : தமிழ்நாடு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது. ஆண்களுக்கு உச்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பில்லை, ஆனால் இருபாலரும் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆலங்காயம் சாலை, வேப்பமரச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர் நேரடி சேர்க்கை (Spot Admission) 19-06-2025 முதல் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் வாணியம்பாடியில் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

தொழிற் பிரிவுகள் : 

1. ரெப்ரிஜ்ரேசன் மற்றும் ஏர் கண்டிஸனிங் டெக்னீசியன் (REFRIGERATION & A.C TECHNICIAN) : கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பயிற்சி காலம். 

2. மெக்கானிக் மோட்டார் வெகிகிள் (MECHANIC MOTOR VEHICLE) - கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பயிற்சி காலம். 

3. லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக் (LIFT & ESCALATOR MECHANIC) - கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பயிற்சி காலம்

4. நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் (FASHION DESIGN & TECHNOLOGY) - கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் பயிற்சி காலம்

தோல் பொருள் உற்பத்தியாளர் (LEATHER GOODS MAKER) - கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் பயிற்சி 

அதிநவீன தொழில்நுட்பம் ( INDUSTRY 4.0) புதிய பயிற்சிகள்

மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் (Mechanic Electric Vehicle) - கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பயிற்சி காலம். 

மேனுஃபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (Manufacturing Process Control and Automation) -கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் பயிற்சி காலம். 

இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னீசியன் (Industrial Robotics and Digital Manufacturing Technician) - கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் பயிற்சி காலம். 

சேர்க்கை வயது வரம்பு : பெண்கள் - வயது உச்ச வரம்பு இல்லை. ஆண்கள் - 14 வயது முதல் 40 வயது வரை.

அரசின் சலுகைகள்: பயிற்சி கட்டணம் ஏதுமில்லை

சிறப்பம்சங்கள் : நான் முதல்வன் திட்டத்தில் ஆங்கில மொழி திறன் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுபவை

1. மாதம் ரூ.750 உதவித்தொகை.
2. அரசுப் பள்ளியில் தமிழ்வழி கல்வி மூலம் பயின்ற மாணவ மற்றும் மாணவிகளுக்கு தமிழ் புதல்வன் உயர்கல்வி உதவித்தொகை மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000
3. விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி.
4. விலையில்லா பாட புத்தகங்கள்.
5. விலையில்லா மிதிவண்டி.
6.விலையில்லா மடிக்கணினி.
7. விலையில்லா வரைபடக்கருவிகள்.
8. இலவச பேருந்து பயண அட்டை
9. இலவச விடுதி வசதி.

தேவைப்படுபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயன்படுத்திக் கொள்ளலாம். எதிர்காலம் உண்டு. 

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : கைவிரல்ரேகை பதிவு செய்யவில்லையா? தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குவது கட்டாயமா? அதிகாரிகள் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News