)
Tamil Nadu Senior Citizen App: மூத்த குடிமக்கள் நலன்களை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. அவர்களுக்காக பல்வேறு திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட மத்திய அரசு 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை அறிவித்தது. 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான திட்டங்கள் எளிமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சீனியர் சிட்டிசன் செயலியை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலினை (Senior Citizen App) மூத்த குடிமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மூத்த குடிமக்கள் நலன் கருதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை (Senior Citizen App) Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in (கைப்பேசி செயலி) மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர், 2023ல் வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த கைப்பேசி செயலியை (Senior Citizen App Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in (கைப்பேசி செயலி) பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவையான பயன்களை பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம். இதுவரை இந்த செயலி குறித்து தெரியாதவர்கள் இப்போது பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ