இந்தியாவில் அதிக ப்ரீபெய்ட் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், தொலைத் தொடர்பு நிறுவனமான Vi புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அற்புதமான சலுகைகளுடன் கொண்டு வருகிறது. அதன்படி வோடபோன் ஐடியா (Vi) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vi (Vodafone Idea) தனது குறைந்த வருமான வாடிக்கையாளர்களுக்கு இலவச காலிங் மற்றும் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ .75 ரீசார்ஜ் (Recharge Plans) இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் Vi இலிருந்து Vi நெட்வொர்க்கிற்கு அழைக்க 50 நிமிடங்கள் பெறுகிறார்கள். 50MB டேட்டாவும் மற்றும் இந்த திட்டம் 15 நாட்கள் செல்லுபடியாகும். 


ALSO READ | Vi Super Plan: BSNL, Jio-வை கலங்கடிக்கும் Vi 4GB தரவுத் திட்டம், எக்கச்சக்க நன்மைகள்


Vi இந்த சலுகையை Unlock 2.0 நன்மை என பெயரிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய திட்டமானது குறைந்த வருமான வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடும். இந்த சலுகையைப் பெற நீங்கள் 44475 # ஐ டயல் செய்ய வேண்டும் அல்லது மிஸ்ட் கால் எண் 121153 ஐ அழைக்க வேண்டும். இதனுடன், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்புவதன் மூலமும் இது குறித்த தகவல்களை அளிக்கும். 


கடந்த மாதம் ஊரடங்கின் காலத்தில், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 இலவச ரீசார்ஜ் கொடுத்தது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ரூ .38 மற்றும் 300 எம்.பி டேட்டா டாக் டைம் கிடைத்தது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். 


ALSO READ | Vodafone-Idea Prepaid Plans: அசத்தல் சலுகை, Vi யின் டபுள் டேட்டா பிளான் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR