வாட்ஸ்அப்பில் நடைபெறும் மோசடிகளில் உஷாராக இருப்பது எப்படி?

';

ஆன்லைனில் மோசடி செய்வோரின் (ஸ்கேமர்களின்) இலக்காக சமீப நாட்களாக வாட்ஸ்அப் மாறி இருக்கிறது

';

கண்டிப்பாக நீங்களும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவராக தான் இருப்பீர்கள். அப்படி என்றால் வாட்ஸ்அப் மோசடிகளை எப்படி எளிதாகக் கண்டறியலாம் என பார்க்கலாம்.

';

பொதுவாக மோசடி நபர்கள் மக்களை அவர்களது முக்கிய தகவல்களை வெளிப்படுத்த வைக்கவும், கால் ஃபார்வேடிங் ஆப்ஷனை எனேபிள் செய்ய வைக்கவும் பல யுக்திகளை பயன்படுத்துகின்றனர்.

';

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் சில மோசடிகளை பற்றி பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட சில வாட்ஸ்அப் மோசடிகள் பற்றி பார்ப்போம்.

';

வேலைவாய்ப்பு மோசடி : லாபகரமான வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி அனுப்பப்படும் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்டு ஒருபோதும் ஏமாற வேண்டாம்.

';

முதலில் லாபகரமான வாய்ப்பு என்று கூறி குறைந்த பணத்தை முதலீடாக போட சொல்வார்கள். உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஓரிரு முறை கணிசமான அளவில் பணம் வழங்குவார்கள்.

';

பிறகு சற்று அதிக தொகையை முதலீடு செய்ய சொல்லி பிறகு உங்கள் பணத்தை சுருட்டி கொடு கம்பி நீட்டி விடுவார்கள். பணத்தோடு சில நேரங்களில் உங்களின் முக்கிய தகவல்களும் கூட அவர்கள் வசம் சென்றுவிடும்.

';

ஐபோன் கிஃப்ட் மோசடி: இ-மெயில் ஐடி-க்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை திருட பயன்படுத்தப்படும் மற்றொரு பொதுவான மோசடி முறை இதுவாக உள்ளது.

';

5 நபர்களுடன் மற்றும் அவர்களின் இ-மெயில் ஐடிக்களுடன் மெசேஜை ஷேர் செய்தால் , புதிய ஐபோன் 15 மொபைல் கிஃப்ட்டாக கிடைப்பது உறுதி என அந்த மெசேஜில் இருக்கும். அதனை ஒருபோதும் நம்ப வேண்டாம்.

';

ஆப்ஸை டவுன்லோட் செய்ய சொல்லும் மெசேஜ் : மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற பல அட்வான்ஸ்ட் மெத்தட்ஸ்களை பயன்படுத்துகின்றனர்.

';

அவற்றில் ஒன்று பேங்க் ஆப்ஸ்களின் APK ஃபைல்ஸ்களை மோசடி நபர்கள் தங்களால் தயார் செய்யபட்ட malicious code-ஆல் அவற்றை மாற்றியமைத்து, மக்களுக்கு அவற்றை வாட்ஸ்அப் மூலம் லிங்க்ஸ்களாக அனுப்புகிறார்கள்.

';

இப்படி அனுப்பும் போது ஸ்கேமர்கள் தங்களை பேங்க் ஏஜெண்ட்ஸ்களாக காட்டி கொள்கிறார்கள். மேலும் போலியான ஃபிஷிங் வெப்சைட்ஸ்கள் மூலம் தொடர்புகொண்டு, சப்போர்ட்டிற்காக app-ன் லிங்கை அனுப்புவது போல அனுப்பி இன்ஸ்டால் செய்ய சொல்லி கேட்கிறார்கள்.

';

இதனை நம்பும் பலர் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட லிங்க்ஸை கிளிக் செய்து ஆப்ஸை இன்ஸ்டால் செய்து தங்களது பேங்க் தகவல்களை என்டர் செய்வார்கள். நீங்கள் இதை ஒருபோதும் செய்யாதீர்கள்.

';

சமீபநாட்களாக இன்டர்நேஷனல் நம்பர்களில் இருந்து வாட்ஸ்அப்-ல் கால்ஸ்களை பல யூஸர்கள் பெற்றனர். உங்களுக்கும் இத்தகைய நம்பர்களில் இருந்து வாட்ஸ்அப்பில் கால்ஸ் வந்தால் ஒருபோதும் அதனை எடுத்து பேச வேண்டாம்.

';

அதற்கு பதிலாக குறிப்பிட்ட அந்த நம்பரை ரிப்போர்ட் செய்து பிளாக் செய்து விடுங்கள். இதுபோன்ற கால்ஸ்களை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்துள்ளது.

';

ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரைமினல்கள் நம்மை மோசடிக்கு ஆளாக்க கூடிய லிங்க்ஸ்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்புவது பொதுவாக நடக்கும் ஒன்று.

';

ஹேக்கர்களால் அனுப்பப்படும் இதுபோன்ற லிங்க்ஸ்களை கிளிக் செய்வதன் மூலம் அது நம்மை ஒரு ஃபிஷிங் வெப்சைட்டிற்கு அழைத்து செல்லும். இது நமது டிவைஸை நேரடியாக பாதிக்க கூடிய மோசடி ஆகும்.

';

இதன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சேமிப்புகள் முழுவதுமாக மோசடி நபர்களின் கைகளில் சிக்க கூடும். எனவே வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களில் மோசடி லிங்க்ஸ் இருக்க கூடும் என்பதால் கவனம் தேவை.

';

இத்தகைய வாட்ஸ்அப் மோசடிகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க, வாட்ஸ்அப் வழங்கும் two-factor authentication போன்ற பாதுகாப்பு அம்சங்களை எனேபிள் செய்யலாம்.

';

அதே போல தேவையற்ற லிங்க்ஸ்களை கிளிக் செய்வதை அல்லது உங்களைத் தொடர்பு கொள்ளும் தெரியாத நபர்களுடன் உங்களது தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

';

VIEW ALL

Read Next Story