ஜியோ, வோடோபோன் அல்ல.. மலிவான ரீசார்ஜ் திட்டத்தின் கிங் BSNL -முழு விவரம்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, ஜியோ மற்றும் VI நிறுவனம் செய்யும் தவறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
ஏற்கனவே விலை உயர்வு காரணமாக ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பலர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர்.
TRAI அறிக்கையின்படி, கடந்த 4 மாதங்களில் பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனைப் படைத்துள்ளது.
இதனால் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் 1 கோடிக்கும் அதிகமான பயனர்களை இழந்துள்ளது.
BSNL ரூ.99 மற்றும் ரூ.107 திட்டங்களை வழங்குகிறது. இதன் காரணமாக மக்கள் நிறைய பயனடைகின்றனர்.
ரூ.99 திட்டத்தில், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 22 நாட்களுக்கு கிடைக்கும்.
அதே நேரத்தில், ரூ.107 திட்டத்தில் 200 நிமிட உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் அடங்கும். இதில் எம்டிஎன்எல் நெட்வொர்க்கில் அழைப்புகளும் அடங்கும். இதனுடன், 3 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது எக்ஸ் (X) தளத்தில் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 55 லட்சம் பயனர்களைச் சேர்த்துள்ளதாகவும், அவர்கள் மற்ற நெட்வொர்க் வழங்குநர்களிடமிருந்து தங்கள் எண்களை போர்ட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.