ஸ்மார்ட்போன் பேட்டரியை ஸ்மார்ட்டா சார்ஜ் செய்ய 20/80 ரூல்! பேட்டரி நீண்ட நாள் உழைக்க டிப்ஸ்!

';

ஸ்மார்ட்போன்கள்

நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், ஸ்மார்ட்போன் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. போனின் பேட்டரி தான் அதன் உயிர், அது வீணாகிவிட்டால் போன் செயல்படாது

';

நீடித்த ஆயுள்

போனின் பேட்டரி நீண்ட நாள் உழைக்க வேண்டுமானால், அதை சார்ஜ் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்

';

சார்ஜிங்

நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் கூட பேட்டரியை பாதுகாக்க சார்ஜிங் செய்யும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வதில்லை. மொபைல் பேட்டரி நன்றாக செயல்படவும், நீண்ட நாள் உழைக்கவும் இந்த டிப்ஸ்கள் உதவியாக இருக்கும்

';

80/20 விதி

80/20 விதி சமீப காலமாக அதிகம் பேசப்படுகிறது. ஃபோனின் பேட்டரியை 20% முதல் 80% வரை சார்ஜ் செய்ய பரிந்துரைக்கும் இந்த விதி, பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க பலனுள்ளதாக இருக்கும்

';

வெப்பம்

80/20 விதியை பயன்படுத்தினால், பேட்டரி செல்கள் மீதான அழுத்தம் குறையும். பேட்டரியின் ஆயுளை அதிகரிக்ப்பதுடன், பேட்டரி அதிக வெப்பமடையாமல் பாதுகாக்கலாம்

';

முழு சார்ஜ்

தொடர்ந்து முழு சார்ஜில் இருப்பது பேட்டரி அதிக வெப்பமடையச் செய்யும், இது பேட்டரி சேதமடையும் அபாயத்தை அதிகரிக்கிறது

';

அசல் சார்ஜர்

முடிந்தவரை, உங்கள் தொலைபேசியுடன் வந்த அசல் சார்ஜரைப் பயன்படுத்தவும். வேறு சார்ஜர்களால் சார்ஜ் செய்வதால், உங்கள் பேட்டரி விரைவில் வீணாகலாம்

';

வெப்பம்

நேரடி சூரிய ஒளி அல்லது வெப்பத்தில் போனை சார்ஜ் செய்யாதீர்கள். பேட்டரி அதிக வெப்பமடைய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story