வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ... சில டிப்ஸ் ..!!

Vidya Gopalakrishnan
Jul 12,2024
';

வாட்ஸ் அப் தகவல்

வாட்ஸ் அப் தகவல் தொடர்பை மிகவும் எளிமையாக்கியுள்ளது. முக்கிய ஆவணங்கள், மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமல்ல போன் கால், வீடியோ அழைப்பு ஆகிவற்றுக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

';

வாட்ஸ்அப் கணக்கை பாதுகாத்தல்

இந்நிலையில், ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க , வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம் நல்லது. இல்லை என்றால், சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

';

டூ ஸ்டெப் வெரிபிகேஷன் அம்சம்

உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் 2 Step Verification அம்சத்தை பயன்படுத்துவதால், உங்கள் போன் மூன்றாம் நபர் கையில் சிக்கினாலும் கணக்கில் நுழைய முடியாது.

';

வாட்ஸ்அப் பாதுகாப்பு டிப்ஸ்

உங்கள் கணக்கை புதிய கருவியில் பதிவு செய்யும்போது, ஆறு டிஜிட் கொண்ட பின் நம்பரும், கூடுதலாக எஸ்எம்எஸ் வெரிஃபிகேஷன் கோடு சேர்ப்பதன் மூலம் கணக்கை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

';

போனை ஹேக் செய்யும் வாய்ப்பு

முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தகவல்களில் அனுப்படும் லிங்குகள் மூலம் உங்கள் போனை ஹேக் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

';

மொபைலை சேதப்படுத்தும் வைரஸ்

சில இணைப்புகளை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாம். மேலும், மொபைலை சேதப்படுத்தும் வைரஸ்கள் பதிவிறக்கமாகலாம்.

';

ப்ரொபைல் தகவல்கள் பாதுகாப்பு

வாட்ஸ் அப்பில் உள்ள, லாஸ்ட் சீன் ஸ்டேட்டஸ், உங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள், ப்ரொபைல் தகவல்கள், ஆகியவற்றை யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் செட்டிங்ஸ் மூலம் முடிவு செய்யலாம்.

';

பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் ஐடி

உங்கள் கணக்கை ஓபன் செய்து தகவல்களை பார்க்க, பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் ஐடி மூலம் ஓபன் செய்யும் பியூச்சரை பயன்படுத்தினால், வாட்ஸ் அப்பை மூன்றாம் நபரால் அணுக முடியாது.

';

ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளில் லாகின்

அலுவலகம் அல்லது பிற கணினியில் வாட்ஸ்அப் லாக் இன் செய்தாலும் பணி முடிந்ததும் உடனடியாக லாக் அவுட் செய்ய வேண்டும்.

';

போன் மூலம் லாக் அவுட் செய்யும் முறை

ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளில் லாகின் செய்திருந்தால் அவ்வப்போது, இதனை லாக்கவுட் செய்ய வேண்டும். மறந்து விட்டாலும், உங்கள் போன் மூலம் கணினி மற்றும் பிற கருவிகளில் இருந்து லாக் அவுட் செய்யலாம்.

';

VIEW ALL

Read Next Story