கூகுள் மேப்-ஐ பொறுத்தவரையில் செல்ல வேண்டிய இடத்துக்கான லோகேஷன் இருந்தால், அதை வைத்தே எங்கு? செல்ல வேண்டும் என்ற வழியை காட்டிவிடும்.
இதில் புதிய அப்டேட்டை கூகுள் நிறுவனம் இப்போது கொண்டு வந்திருக்கிறது.
இதன் மூலம் செல்ல வேண்டிய இடத்துக்கான சிறந்த வழி மற்றும் பெட்ரோல் செலவு ஆகியவற்றை அது தெரிவித்துவிடும்.
இந்த அப்டேட்டின் படி நமது வாகனம் குறித்த தகவல்களை முதலில் உள்ளீடு செய்ய வேண்டும்.
நாம் எந்த வாகனத்தில் பயணிக்கிறோம், அதன் இன்ஜின் திறன் விபரங்களை கொடுத்த பிறகு எங்கு பயணம் செய்ய வேண்டும்? என்பதை கொடுக்க வேண்டும்.
இதனை செய்தபிறகு செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக சென்றால் பெட்ரோல், டீசல் செலவு குறையும் என கணக்கிட்டு அந்த வழியை நமக்கு கூகுள் மேப் பரிந்துரை செய்யும்.
தற்போது இந்த அப்டேட் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு விரைவில் இந்த அப்டேட் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.