ஜியோவின் 268 ரூபாய் பிளான் - ஒரு வருட வேலிடிட்டி..!

';

ஒரு வருடம் மிகவும் மலிவு விலையில் டேட்டா திட்டம் இருப்பதை ஜியோ யூசர்களே தெரிந்து கொள்ளுங்கள்.

';

அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற அதிகப்படியான சலுகைகளை மாதத்துக்கு வெறும் ரூ.268 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு ஜியோ (Jio) நிறுவனம் வழங்கி வருகிறது. இத்திட்டம் குறித்த விவரம் இதோ.

';

ஜியோ ரூ 3227 திட்ட விவரங்கள் (Jio Rs 3227 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

';

ஆகவே, மொத்தமாக 730 ஜிபி டேட்டா ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

';

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.268 மட்டுமே செலவாகிறது. இது போன்ற சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் வேண்டுமானால், ரூ 3178 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தின் சலுகை இப்போது தெரிந்து கொள்வோம்.

';

ஜியோ ரூ 3178 திட்ட விவரங்கள் (Jio Rs 3178 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

';

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை ஒரு வருடத்துக்கு பயன்படுத்தலாம். இவ்வளவு சலுகைகள் போக ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ( Disney+Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.

';

இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை கணக்கிட்டால், வெறும் ரூ.264 மட்டுமே தேவைப்படுகிறது. வருடம் முழுவதும் அதிகப்படியான டேட்டா சலுகை மட்டுமல்லாமல், முன்னணி ஓடிடி தளங்களில் சப்ஸ்கிரிப்ஷனும் வேண்டும் என்றால், இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story