)
WhatsApp Data Leak: நம் ஆறாவது விரல் ஆகி விட்டது. இது நம் வாழ்வின் ஒரு இன்றியமையாத அம்சமாக மாறி விட்டது. இதில் அவ்வப்போது பல வித புதிய அப்டேட்களும் வருகின்றன. ஆனால், தற்போது வந்துள்ள ஒரு செய்தி வாட்ஸ்ஆப் பயனர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இரவில் பல சமயங்களில் நம் மொபைல் போனின் திரை திடீரென ஒளிரும். பலமுறை தெரியாத எண்ணிலிருந்து "ஹாய்" என்ற செய்தியோ, நம்பிக்கை அளிக்கும் வகையில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளோ வருவதுண்டு. இவற்றை நாம் பெரும்பாலும் புறக்கணித்துவிடுகிறோம். ஆனால் நவம்பர் 2025 இல் நடத்தப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் ஆய்வு, சாதாரணமாகத் தெரியும் இந்த செய்திகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் வாட்ஸ்ஆப் பயனர்களின் பீதியை நிச்சயமாக அதிகரிக்கும். WhatsApp -இன் முழு உறுப்பினர் கோப்பகமும் நீண்ட காலமாக ஆன்லைனில் பாதுகாப்பற்றதாக இருந்தது என்றும், டார்க் வெப்பிலும் இது விற்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. தாங்கள் 3.5 பில்லியன் பயனர்களின் தொலைபேசி மற்றும் ப்ரொஃபைல் தரவை தடையின்றி அணுகியதாக ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது இதுவரை இல்லாத மிகப்பெரிய தரவு கசிவாகக் கருதப்படுகிறது.
மெட்டா நிறுவனத்திற்கு தரவு மீறல் பிரச்சனைகள் புதிதல்ல. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தரவு மீறலை யாரும் மறக்க முடியாது. 2017 ஆம் ஆண்டில் இந்த பாதிப்பு குறித்து மெட்டாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்தது. சைபர் குற்றவாளிகள் இந்தத் தரவு சுரண்டலில் நீண்ட காலம் ஈடுபட்டிருக்கலாம் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
350 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களின் தரவு ஆபத்தில் இருப்பதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இருப்பினும், இது ஒரு வழக்கமான 'ஹேக்' அல்ல என்று விசாரணைகள் வெளிப்படுத்தின. இது சர்வர் செயலிழப்பு வழக்கு அல்ல. இது பயனர்களின் டிஜிட்டல் அடையாளம் அம்பலப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட அப்பத்து. மேலும் இதில் மிகப்பெரிய குற்றவாளி தரவுகளை தொருடிய ஹேக்கர் அல்ல, மாறாக இதற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப் அமைப்பு குறைபாடு.
ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், வாட்ஸ்அப்பில் உள்ள தொடர்பு கண்டுபிடிப்பு குறைபாடு உலகளவில் பயனர்களை வெளிப்படுத்தியதைக் கண்டுபிடித்தனர். எளிமையாகச் சொன்னால், ஒரு ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் வாட்ஸ்அப்பில் மில்லியன் கணக்கான சீரற்ற மொபைல் எண்களை பிங் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ப்ரொஃபைல் புகைப்படம், கணக்கின் ஆக்டிவ், அபவுட் விவரங்கள் அவர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. இது எண் உண்மையானது மற்றும் பயன்பாட்டில் உள்ளது என்பதை நிரூபித்தது.
அதாவது ஒரு நபர் ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகளவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களின் சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலைத் தொகுத்து டார்க் வெப்பில் விற்கலாம்.
வாட்ஸ்அப் அரட்டைகள் பாதுகாப்பாக உள்ளன. End-to-End Encryption இன்னும் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும், உங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் ஐடியாக மாற்ற முடியும் என்பதே ஆபத்து. சைபர் நிபுணர்கள் இதை Data Enrichment என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒரு எண் செயலில் உள்ளது என்பதை மோசடி செய்பவர்கள் அறிந்தவுடன், கறுப்புச் சந்தையில் அதன் மதிப்பு அதிகரிக்கிறது.
இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் இருப்பதால், உலகளாவிய தரவு ஸ்க்ராப்பிங் நடவடிக்கைகளில் இந்திய எண்கள் முதன்மையான இலக்குகளாக உள்ளன. இது டிஜிட்டல் கைது மோசடிகள், பகுதி நேர வேலை மோசடி மற்றும் +92, +84 மற்றும் +62 ஐப் பயன்படுத்தி வீடியோ அழைப்புகள் போன்ற சம்பவங்களில் சமீபத்திய அதிகரிப்புக்கு வழிவகுத்தது. குறைபாடு இப்போது சரி செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், ஆனால் ஏற்கனவே ஸ்க்ராப் செய்யப்பட்ட தரவு அப்படியே உள்ளது.
பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், எந்த கணக்குகள் அல்லது அரட்டைகளும் ஹேக் ஆனதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் மெட்டா கூறியது. இது நிச்சயமாக ஒரு நிவாரணத்தை அளித்துள்ளது. ஆனால் அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
WhatsApp பயனர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு அவர்களது கைகளில் உள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் 100% தனியுரிமை சாத்தியமற்றது. ஆனால் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பயனர்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
உங்கள் WhatsApp அமைப்புகளில் உடனடியாக இந்த மாற்றங்களைச் செய்வது நல்லது:
- Profile Photo → My Contacts
- About → My Contacts
- Last Seen & Online → My Contacts
- Silence Unknown Callers → On
இந்த சிறிய நடவடிக்கை உங்கள் டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்க உதவக்கூடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ