ஷான் நிகாம் மற்றும் ஷாந்தனு நடித்துள்ள பல்டி படத்தின் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் சாய் அபயங்கர்
அனிருத் உடன் போட்டியா என சாய் அபயங்காரிடம் பல்டி பட செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ஓப்பானாக பதில் அளித்துள்ளார் சாய். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
பல்டி படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார்.