அகண்ட ஜோதியில் படிவது கரி அல்ல, குங்குமப்பூ! ஜோத்பூர் தெய்வத்தின் திருவிளையாடல்

ஜோத்பூரின் இந்த கோயில் மிகவும் தனித்துவமானது, பிரசித்தி பெற்றது. இந்து மத நம்பிக்கைகளின்படி, விளக்கு ஏற்றுவது என்பது இன்னல்களை அகற்றும், இருளை அகற்றி ஒளியை கொடுக்கும். என்றென்றும் உலகம் நிம்மதியுடன் இருக்க அகண்ட ஜோதி தீபம், அணையா விளக்கு ஏற்றப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 04:08 PM IST
அகண்ட ஜோதியில் படிவது கரி அல்ல, குங்குமப்பூ! ஜோத்பூர் தெய்வத்தின் திருவிளையாடல் title=

ஜோத்பூரின் இந்த கோயில் மிகவும் தனித்துவமானது, பிரசித்தி பெற்றது. இந்து மத நம்பிக்கைகளின்படி, விளக்கு ஏற்றுவது என்பது இன்னல்களை அகற்றும், இருளை அகற்றி ஒளியை கொடுக்கும். என்றென்றும் உலகம் நிம்மதியுடன் இருக்க அகண்ட ஜோதி தீபம், அணையா விளக்கு ஏற்றப்படுகிறது.
விளக்கேற்றுபவர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்குகிறது விளக்கேற்றுபவர்களின் நம்பிக்கை.
காலங்கள் மாற மாற மனிதர்களின் இயல்பும் போக்கும் மாறுகிறது. மதத்தையும், ஆன்மீகத்தையும் நோக்கிய மக்களின் ஈர்ப்பு குறைந்து வருகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் ஆன்மீக நம்பிக்கையை பாரம்பரியமாக பின்தொடர்கின்றனர். பில்வாடாவில் அமைந்துள்ள ஆயா மாதா கோயில் மக்களின்  நம்பிக்கையின் மையப் புள்ளியாக உள்ளது. விஞ்ஞான யுகத்திலும், அங்க்கு நடக்கும் அற்புதங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.  
ஆயி மாதா எனப்படும் அன்னையின் கோயில்கள் இந்தியா முழுவதும் சுமார் 800 இடங்களில் அமைந்துள்ளன. பில்வாடாவில், ஆண்டுதோறும் மிகப் பெரிய திருவிழா நடைபெறுகிறது. அதில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பிலாடாவுக்குச் சென்று அன்னையை தரிசித்து அருள் பெறுகின்றனர்.    550 ஆண்டுகளுக்கு முன்பு ஆயி மாதா கோவிலில் ஏற்றப்பட்ட தீபம் இன்னும் அணையாமால் பட்டொளி வீசிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக விளக்க்கு எரிந்தால் அதில் கரி பிடிக்கும் அல்லவா? ஆனால் இந்த அன்னையின் விளக்கின் சுடருக்கு மேலே வைக்கப்பட்டுள்ள செந்நிறத்தில் குங்குமப்பூ உருவகிறது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் நவராத்திரியில் இங்கு வந்து அன்னையின் பாதங்களை சரணடைகின்றனர். ஜோத்பூரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில்  ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயி மாதாவின் கோயில் உலக புகழ்பெற்றதாகும். இங்கு அணையா தீபம் எரிவது போல, அன்னையின் அருளும் பக்தர்களை என்றும் காக்கிறது. 
அணையா தீபத்தின் மேல் உள்ள பாத்திரத்தில் படியும் செந்நிற புகையைப் பார்க்கும்போது அது குங்குமப்பூவைப் போல இருக்கிறது. பக்தர்கள் அந்த குங்குமப்பூவை பிரசாதமாக கொண்டு சென்று எண்ணெயில் குழைத்து, மையாக கண்களில் இட்டு அன்னையின் அருளை பெற்று சிறப்புடன் வாழ்கின்றனர்.  
கி.பி 1556 இல் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஒரு சிம்மாசனம் உள்ளது, இந்த சிம்மாசனத்தையும் பக்தர்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். அரியணையில் அன்னையின் படம் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். இங்கு கிடைக்கும் அன்னையின் பிரசாதமான குங்குமப்பூவை கண்களில் மையாக தரித்தால், தரித்திரம் விலகும், நோய்நொடிகள் ஓடிப்போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வழக்கத்தை விட நவராத்திரியில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள கோவிலை பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.   இந்த கோயில் ஆண்டுடில் இரண்டு முறை நவராத்திரி சமயத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் இங்கு மிகப்பெரிய அளவில் திருவிழா  நடத்தப்படுகிறது.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News