2021 ஆம் ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வழக்கத்தை விட முன்னதாக நடத்தவுள்ளதா CBSE?

CBSE ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட முன்னரே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்றும், மாணவர்களின் பட்டியல், தேர்வு படிவங்கள் (LOC) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2020, 01:06 PM IST
  • CBSE, 2021 ஆம் ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, எதிர்பார்ப்புக்கு மாறாக முன்னரே நடத்தக்கூடும் என தெரிய வந்துள்ளது.
  • NEET, JEE ஆகிய தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • கொரோனா வைரஸ் காரணமாக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET) பி.எஸ்.இ ஒத்திவைத்தது.
2021 ஆம் ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வழக்கத்தை விட முன்னதாக நடத்தவுள்ளதா CBSE? title=

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2021 ஆம் ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, எதிர்பார்ப்புக்கு மாறாக முன்னரே நடத்தக்கூடும் என தெரிய வந்துள்ளது. NEET, JEE ஆகிய தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக CBSE இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

CBSE ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட முன்னரே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்றும், மாணவர்களின் பட்டியல், தேர்வு படிவங்கள் (LOC) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ: நவ., 17 மீண்டும் பள்ளிகளை திறக்க வாய்பே இல்லை: கவித்துறை அமைச்சர் திட்டவட்டம்!!

CBSE உடன் இணைந்த பல பள்ளிகளும் பாடத்திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க தங்கள் நேர அட்டவணையைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாக தேர்வுகள் நடத்தப்பட்டால் எந்த வித சிக்கலையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி வகுப்புகள் 6 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், பாடத்திட்டங்களை குறைக்க அல்லது தேர்வுகளை 45 முதல் 60 நாட்கள் தாமதப்படுத்த CBSE திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் முன்னர் வந்தன.

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET) பி.எஸ்.இ ஒத்திவைத்தது நினைவிருக்கலாம். முன்னதாக இந்தத் தேர்வு 2020 ஜூலை 5 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அது 2021 ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும்.

ALSO READ: டிசம்பர் 31 வரை பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பு இல்லை: அரசு திட்டவட்டம்.!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News