Health News: தேன் ஏன்? தித்திக்கும் தேனால் கிடைக்கும் திகட்டாத வாழ்க்கை!!

தேன் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாகும். தேனால் ஏற்படும் அன்றாட பயன்கள் ஏராளம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2021, 06:59 PM IST
  • தேன் நம் பாரம்பரியத்தில் கலந்துள்ள ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது.
  • தேன் நம் குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது
  • தேனின் இனிப்பு நம் உடலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
Health News: தேன் ஏன்? தித்திக்கும் தேனால் கிடைக்கும் திகட்டாத வாழ்க்கை!!  title=

Health Benefits of Honey: நாம் நமது வரலாற்றை சற்று திருப்பிப் பார்த்தால் பல்வேறு நோய்களுக்கு ஒரு சரியான தீர்வாக தேன் இருந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தேன் பலவிதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. நமது நாட்டைப் பொறுத்தவரை, தேன் நம் பாரம்பரியத்தில் கலந்துள்ள ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. இனிமையையும் தேனையும், மென்மையையும் தேனையும் நம் பண்டைய கவிஞர்கள் ஒப்பிட்டுள்ளதை நாம் கண்டுள்ளோம்.

தேனில் (Honey) செய்யப்படும் கலப்படம் அதன் சத்தான திறன்களின் ஆற்றலைக் குறைக்கிறது. ஆகையால் தேன் வாங்கும்போது அதிகமான கவனம் அவசியம். தேனால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

நம் வீட்டிலேயே இருக்கும் அருமருந்தாகும் தேன்

தேன் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாகும். தேனால் ஏற்படும் அன்றாட பயன்கள் ஏராளம். அனைவரது வீடுகளின் சமயலறைகளிலும் கண்டிப்பாக இருக்கும் தேனை வீட்டிலேயே இருக்கும் மருத்துவர் என்றும் அழைப்பதுண்டு. ஏனெனில், தேன் பல உடல் உபாதைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.  

தேன் தொண்டை வலிக்கு இதமளிக்கும்

மிதமான சூட்டிலுள்ள ஒரு கப் தேநீர் அல்லது நீரில் தேனை சேர்த்து உட்கொண்டால், அது தொண்டை புண்ணை குணப்படுத்தி இருமலை கட்டுப்படுத்துகிறது.

ALSO READ: அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!

தேன் செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது

தேன் ஒரு சக்திவாய்ந்த ப்ரீபயாடிக் ஆகும். அதாவது இது குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களை (Bacteria) வளர்க்கிறது. நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவை. ஆகையால் தொடர்ந்து தேனை உட்கொள்வது நமது செரிமான (Digestion) பிரச்சனைகளை சரி செய்யும்.

தேன் ஆன்டிஆக்ஸிடண்டுகளை அளிக்கிறது

ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உங்கள் உடலில் ஏற்படும் செல் சேதத்திலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகின்றன. தேனில் ஆன்டிஆக்ஸிடண்டுகளாக செயல்படும் பல தாவர இரசாயனங்கள் உள்ளன. ஆகையால் தேன் நமது உடலில் செல்களின் பாதுகாப்பில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது.

தேன் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது

தேன் இயற்கையான முறையில் நமக்கு இனிப்பை வழங்குகிறது. தேனின் இனிப்பு நம் உடலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடற்பயிற்சியால் (Exercise) ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராட தேன் மிகவும் உதவியாக இருக்கிறது. உடலுக்கு உடனடி ஆற்றல் தேவைப்பட்டால், அதற்கு தேனை விட ஒரு சிறந்த தீர்வு இருக்க முடியாது. 

ALSO READ: Health News: காலையில் விரைவில் துயிலெழ சில எளிய வழிகள் இதோ

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News