இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை எட்டியதா... சுகாதார அமைச்சர் கூறுவது என்ன...!!!

இந்தியாவில்  COVID-19  நோய்த்தொற்று, அதாவது கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1 லட்சம்  என்ற அளவில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2020, 09:09 AM IST
  • இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்று, அதாவது கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1 லட்சம் என்ற அளவில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
  • கடந்த, 24 மணி நேரத்திற்குள் 92,605 புதிய தொற்றுநோய் பாதிப்புகள் பதி செய்யப்பட்ட, மொத்த எண்ணிக்கை, 54 லட்சத்தை தாண்டியது.
  • மொத்தம் 43,03,043 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், அதைத் தொடர்ந்து குணமடையும் விகிதம் 79.68 சதவீதமாக உயர்ந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை எட்டியதா... சுகாதார அமைச்சர் கூறுவது என்ன...!!!  title=

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்று, சமூக பரவல் கட்டத்தை  அடைந்துள்ளது என்று பல சுகாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்த நிலையில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஞாயிற்றுக்கிழமை, நாட்டில் உள்ள நகர்ப்புறம், புற நகர் பகுதிகளில் தான் தாக்கம் அதிகம் உள்ளன என்றும் மற்றும் கிராமப்புற  பகுதிகளில் குறைவாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் (India)  10 மாநிலங்களில் மட்டும் தான் அதிக கொரோனா ( corona )  பாதிப்பு என்றும், அந்த மாநிலங்களில், மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 77 சதவீத பாதிப்பை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்".

"சில மாவட்டங்களில்  மட்டுமே தொற்று பரவல் மிக அதிகம் காணப்படுகிறது ... 10 மாநிலங்கள் மட்டுமே 77 சதவீத ஆக்டிவ் தொற்றூ பாதிப்புகளை கொண்ட்உள்ளன. மாநிலங்கள் தொடர்பான தரவை பார்க்கும் போது, இந்த தொற்று பாதிப்புகள் சில மாவட்டங்களில் மட்டுமே அதிகம் உள்ளன என்பதை காணலாம், ”என்று சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் COVID-19 இன் சமூக பரவல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட நிலையில், மத்திய சுகாதார அமைச்சர். இவ்வாறு கூறியுள்ளார். ஏனெனில் ஏராளமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இதைப் பற்றி மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும் என்றும் ஜெயின் வலியுறுத்தினார்

இந்தியாவில்  COVID-19  நோய்த்தொற்று, அதாவது கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1 லட்சம்  என்ற அளவில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த, 24 மணி நேரத்திற்குள் 92,605 புதிய தொற்றுநோய் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட, மொத்த எண்ணிக்கை, 54 லட்சத்தை தாண்டியது.

அதே நேரத்தில் மொத்தம் 43,03,043 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், அதைத் தொடர்ந்து குணமடையும் விகிதம் 79.68 சதவீதமாக உயர்ந்தது. இறப்பு விகிதம் 1.61 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன

மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ALSO READ | Corona குளிர் காலத்தில் மின்னல் வேகத்தில் பரவும்; பீதியை கிளப்பும் வல்லுநர்கள்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News