சீனாவின் Sinopharm-ன் கொரோனா தடுப்பு மருந்து: ஆராய்ச்சியாளர்கள் கருத்து என்ன..!!!

சீனாவின் Sinopharm-ன் கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆராய்ச்சியாளர்கள், நம்பிக்கையான தகவல்களை வெளியிட்டுள்ளனர்

Last Updated : Aug 14, 2020, 06:20 PM IST
  • சீனா தேசிய மருந்து நிறுவனம் (சினோபார்ம்) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்
  • இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசி தயாராகலாம் என தடுப்பு மருந்தை தயாரித்து வரும் சினோபார்ம் நிறுவனம் கூறுகிறது.
  • சீனா சுமார் 8 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. ஒவ்வொன்றும் பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.
சீனாவின் Sinopharm-ன் கொரோனா தடுப்பு மருந்து: ஆராய்ச்சியாளர்கள் கருத்து என்ன..!!! title=

கொரொனா வைரஸ் உலகம் முழுவதையும் தனது பிடியில் வைத்துக் கொண்டு ஆட்டி படைத்து வரும் நிலையில், சிறது நாட்கள் முன்பாக ரஷ்யா, தடுப்பு மருந்து தயார் எனக் கூறியது. 

செவ்வாயன்று ஒரு அரசு கூட்டத்தில் பேசிய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், நாட்டில் தயாரிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவரது மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இந்நிலையில் சீனாவின் சினோபார்ம் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பாக மருந்தாக தோன்றுகிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மருத்துக்கான ஒப்புதலைப் பெறவும், போதுமான செயல்திறன் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்யவும் பல ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது இப்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 

ALSO READ | ஆயுஷ்மான் பாரத்: ஏழைகளுக்கு மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்துக்கும் ஆபத்பாந்தவன் தான்..!!

சீனா தேசிய மருந்துக் குழுவின் (சினோபார்ம்) நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது என்றும் ஆரம்ப கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் ஆன்டிபாடி அடிப்படையிலான நோயெதிர்ப்பு சக்தியை தூண்டியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 15,000 பேருக்கு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் புதிய தொற்று பாதிப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், அங்கு பெரிய அளவில் பரிசோதனை மேஎற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

சினோபார்ம் மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட பிற நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த ஆய்வு தொடர்பாக, வியாழக்கிழமை ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் ((JAMA) வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்த தடுப்பு மருந்து எந்தவிதமான கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறினர்.

முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் ஆரோக்கியமாக உள்ள 320 பேருக்கு இந்த தடுப்பு ம்ருந்தை வழங்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான தரவுகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் இதனை தெரிவித்தனர்.

ALSO READ | நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!!

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு வலுவான ஆன்டிபாடி அடிப்படையில் எதிர்ப்பு சக்தி வலுவடைந்தது என்றாலும்,  COVID-19 நோய்த்தொற்றைத் தடுக்க இது போதுமானதா என்பது தெரியவில்லை எனவும்  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசி தயாராகலாம் எனவும், 3 ஆம் கட்ட பரிசோதனை சுமார் மூன்று மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் கடந்த மாதம் கூறினார்.

உலகளவில் 7,50,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸுக்கு எதிராக, உலகம் முழுவதும் 150 வகை தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

சீனா சுமார் 8 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. ஒவ்வொன்றும் பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

Trending News