July 2021-க்குள் 25 கோடி இந்தியர்கள் COVID Vaccine-ஐ பெறுவார்கள்: இந்திய அரசு

அடுத்த இரண்டு மாதங்களில், தீபாவளி நேரத்தில், கொரோனா வைரஸ் மீது நமக்கு ஒரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு இருக்கும் என்று நம்புகிறோம் என்று ஹர்ஷ் வர்தன் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 03:01 PM IST
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் 50 கோடி டோஸ்கள் கிடைத்து விடும்-ஹர்ஷ் வர்தன்.
  • கொரோனா வைரஸ் நமக்கு பல பாடங்களை கற்பித்திருக்கிறது-ஹர்ஷ் வர்தன்.
  • அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கொரோனா தொற்று என்ணிக்கை உள்ள நாடாக இந்தியா உள்ளது.
July 2021-க்குள் 25 கோடி இந்தியர்கள் COVID Vaccine-ஐ பெறுவார்கள்: இந்திய அரசு title=

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் 50 கோடி டோஸ்கள் கிடைத்து விடும் என இந்திய அரசாங்கம் நம்பிக்கைக் கொண்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Dr. Harsh Vardhan) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் 25 கோடி மக்களுக்கு இந்த தடுப்பு மருந்துகளை அளிக்க முடியும்.

டாக்டர் ஹர்ஷ் வர்தன், தீபாவளிக்குள் COVID-19 மீது நாம் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டை அடைந்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"... அடுத்த இரண்டு மாதங்களில், தீபாவளி நேரத்தில், கொரோனா வைரஸ் (Corona Virus) மீது நமக்கு ஒரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு இருக்கும் என்று நம்புகிறோம்," என்று வர்தன் கூறினார்.

ஆனால், வைரஸ் நமக்கு பல பாடங்களை கற்பித்திருக்கிறது. ஒரு புதிய இயல்பை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், நாம் அதிக விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், நமது வாழ்க்கை முறை குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அது நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: Chennai-ல் அதிகரிக்கும் COVID தொற்று: மண்டலம் வாரியான அலசல்!!

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health and Family Welfare) கூற்றுப்படி, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியபடி இந்தியா ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 140 சோதனைகள் என்ற அளவிற்கு ஆறு மடங்கு அதிகமாக சோதனைகளை நடத்தியுள்ளது. பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியை விட சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.

தடுப்பு மருந்து வழங்கல் சங்கிலியின் பல்வேறு அம்சங்களை ஆராய இந்தியா குழுக்களை அமைத்துள்ளது. இதில் பல்வேறு தடுப்பு மருந்துகள் (Vaccine) கிடைப்பதற்கான காலக்கெடு உட்பட, அதிகபட்ச அளவுகள் கிடைப்பதை உறுதி செய்ய உற்பத்தியாளர்களிடமிருந்து உறுதியைப் பெறுவது ஆகியவையும் அடங்கும் என்று ஹர்ஷ வர்தன் கூறினார்.

தடுப்பு மருந்துகள் தயாரானவுடன் "நியாயமான மற்றும் சமமான" விநியோகத்தை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் அவர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கொரோனா தொற்று என்ணிக்கை உள்ள நாடாக இந்தியா உள்ளது. இங்கே இன்னும் மொத்த மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பதால், இங்கு இன்னும் எண்ணிக்கைகள் அதிக அளவில் உயர வாய்ப்புள்ளது என ஒரு கணக்கெடுப்பு செவ்வாயன்று தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளின் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க, இந்த மாத இறுதிக்குள் முன்னணி சுகாதார ஊழியர்கள் போன்ற முக்கிய நபர்களின் பட்டியலைத் தயாரிப்பதை சுகாதார அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ALSO READ: COVID-19 Update: புதிய பாதிப்புகள் 74,442; மொத்த பாதிப்புகள் 66 லட்சத்தை தாண்டியது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News