Sep 15 வரை 6,05,65,728 மாதிரிகள் சோதிக்கப்பட்டன, பீதியைக் கிளப்பும் தொற்று எண்ணிக்கை : ICMR

ICMR -ன் தரவுகளின்படி, இந்தியா செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 11,16,842 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியது. இதன்மூலம் இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 5,94,29,115 ஆக உயர்ந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2020, 10:41 AM IST
  • நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேர் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர்.
  • மீட்பு விகிதம் 78.53 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.63 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • புதன்கிழமை தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.
Sep 15 வரை 6,05,65,728 மாதிரிகள் சோதிக்கப்பட்டன, பீதியைக் கிளப்பும் தொற்று எண்ணிக்கை : ICMR title=

புதுடில்லி: செப்டம்பர் 15 வரை, கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றை கண்டறிவதற்காக சுமார் 6,05,65,728 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வியாழக்கிழமை (செப்டம்பர் 17, 2020) தெரிவித்துள்ளது. இவற்றில் 11,36,613 மாதிரிகள் புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டன என ICMR கூறியுள்ளது.

ICMR -ன் தரவுகளின்படி, இந்தியா செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 11,16,842 மாதிரிகளின் சோதனைகளை (Sample Testing) நடத்தியது. இதன்மூலம் இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 5,94,29,115 ஆக உயர்ந்தது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123  பேர் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். 1,290 இறப்புகள் பதிவாகின.  இவற்றுடன் இந்தியாவில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) தெரிவித்துள்ளது. புதன்கிழமை இரவு நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,20,359 ஆக உள்ளது.

ஜூலை 17 அன்று, இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது ஆகஸ்ட் 7 அன்று, 20 நாட்களில் 20 லட்சமாக இருமடங்காக அதிகரித்தது. ஆகஸ்ட் 23-குள் இந்த எண்ணிக்கையில் இன்னும் 10 லட்சம் சேர்ந்தது. செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்தது. 11 நாட்களில், இதில் மேலும் 10 லட்சம் கூடி, புதன்கிழமை தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.

ALSO READ: உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா ஒப்பந்தம்

மொத்த எண்ணிக்கையில், 9,95,933 பேர் சிகிச்சையில் உள்ளனர். 39,42,360 பேர் குணமடைந்துவிட்டனர். 82,066 பேர் இந்த வைரஸ் நோய்க்கு எதிரான போரில் தோற்று இறந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 82,961 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மீட்பு விகிதம் (Recovery Rate) 78.53 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் (Fatality Rate) 1.63 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

30,409 இறப்புகள் உட்பட மொத்தம் 10,97,856 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா (Maharashtra) தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக உள்ளது. தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

திங்களன்று, டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் சோதனையை அதிகரிக்க அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இந்த மாநிலங்களில் நேர்மறை விகிதங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இந்த நான்கு மாநிலங்களில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல், 53.5 சதவீதமாக உள்ளது.

ALSO READ: மத்திய அமைச்சர் Nitin Gadkari-க்கு COVID தொற்று: தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News