Loan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..!!!

முன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2020, 11:36 AM IST
  • முன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.
Loan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..!!! title=

கடன்கள் அடைக்க முடியாமல் திணறியவர்களுக்கு உதவும் வகையில், கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையை (Loan Moratorium) ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

முன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.

கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர், ஆட்டோ, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை, தொழில்முறை மற்றும் நுகர்வு கடன்கள் ஆகியவற்றிற்கு பொருந்தக்கூடிய கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் (Supreme Court)  தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தில், 6 மாத கடன் தவணை காலத்தில், இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடனிற்கான வட்டியில், அரசு வட்டி தள்ளுபடி அளிக்கும் என கூறியுள்ளது. இதன் பொருள் வங்கிகள் கடன் சலுகை வழங்கியதற்காக கூடுதல் வட்டியை  வசூலிக்காது.வாடிக்கையாளர்கள் சாதாரண அளவில் மட்டுமே வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். 

கொரோனா தொற்றுநோய் நெருக்கடி காரணமாக வட்டிக்கு வட்டி வசூலிப்பதி இருந்து விலக்கு அளித்து, அந்த சுமையை அரசு ஏற்கும்  என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் கூறியுள்ளது.

கல்வி, வீட்டுவசதி, வாகனம், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை, தொழில்முறை கடன்கள் ஆகியவற்றிற்கு வட்டியின் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

ALSO READ | Password-ஐ ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News