Gilgit-Baltistan தேர்தல்: சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாக்.கின் தில்லாலங்கடி..!!!

PoK பகுதியில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தானில், தேர்தலை நடத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கை  சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாகிஸ்தானின் நரி தந்திரம் என இந்தியா சாடியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2020, 06:14 PM IST
  • PoK பகுதியில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தானில், தேர்தலை நடத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கை சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாகிஸ்தானின் நரி தந்திரம் என இந்தியா சாடியுள்ளது.
  • சமீபத்தில் பாகிஸ்தான், கில்கிட்-பால்டிஸ்தான் திருத்த ஆணை 2020 என்ற உத்தரவின் கீழ் நவம்பர் 15 ஆம் தேதி கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
Gilgit-Baltistan தேர்தல்: சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாக்.கின் தில்லாலங்கடி..!!! title=

புதுடெல்லி: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தானில் (Gilgit Baltistan) தேர்தலை பாகிஸ்தான் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைப்பதற்கான பாகிஸ்தானின் தந்திர நடவடிக்கை என இந்தியா கூறியது

கடந்த ஏழு தசாப்தங்களாக பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் கடுமையான மனித உரிமை மீறல்கள், சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றை இந்த நடவடிக்கைகளால் மறைக்க முடியாது என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான், கில்கிட்-பால்டிஸ்தான் திருத்த ஆணை 2020 என்ற உத்தரவின் கீழ் நவம்பர் 15 ஆம் தேதி கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இப்பகுதியை ஐந்தாவது மாகாணமாக மாற்ற நாடு திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்த பகுதியை ஐந்தாவது மாகாணமாக மாற்றுவதி அங்குள்ள மக்கள் பெரிதும் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Gilgit-Baltistan: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையானது பாகிஸ்தான் நிலை..!!

1947 ஆம் ஆண்டில் கில்கிட்- பால்டிஸ்தான் என அழைக்கப்படும் பகுதிகள் உட்பட "ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்" என்றும் "பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் MEA மீண்டும் வலியுறுத்தியது. அப்பகுதிகள் சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என இந்தியா தெளிவு படக் கூறியது.

பாகிஸ்தான் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் அனைத்து பகுதிகளையும் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் இந்தியா பாகிஸ்தானிடம் உறுதிபட கூறியுள்ளது.

மேலும் படிக்க | காஷ்மீர் ராகம் பாடாம, PoK இடத்தை மொதல்ல காலி பண்ணுங்க: ஐநாவில் இந்தியா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News