“அவங்கள Public-கா சுடுங்க”: Hathras Gangrape Case குறித்து Twitter-ல் கங்கணா!!

பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த செயலை கடுமையாக கண்டித்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கோரி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2020, 05:23 PM IST
  • பாதிக்கப்பட்ட பெண் செப்டம்பர் 14, 2020 அன்று உ.பி-யின் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார்.
  • அவர் தலைநகரில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
  • இந்த கொடுமையைச் செய்தவர்களை பகிரங்கமாக சுட வேண்டும் – கங்கணா.
“அவங்கள Public-கா சுடுங்க”: Hathras Gangrape Case குறித்து Twitter-ல் கங்கணா!! title=

புதுடெல்லி: நடிகை கங்கனா ரணௌத் ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்கார (Hathras Gangrape) வழக்கைப் பற்றிய தன் கருத்துக்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட 19 வயது பெண், தலைநகரில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் செப்டம்பர் 14, 2020 அன்று உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். அவர் தனது குடும்பத்தினருடன் புல் வெட்டிக் கொண்டிருந்த போது, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைக் கோரி, கங்கணா (Kangana Ranaut) தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த கொடுமையைச் செய்தவர்களை பகிரங்கமாக சுட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் இந்த கும்பல் கற்பழிப்புகளுக்கு என்ன தீர்வு? இது நாட்டிற்கு மிகவும் ஒரு சோகமான மற்றும் வெட்கக்கேடான நாள். நம் மகள்களைக் காப்பாற்றுவதில் நாம் தோற்றுவிட்டோம்” என்று எழுதியுள்ளார்.

பாதிக்கப்பட்ட 19 வயது பெண் முதலில் AMU இன் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை சிகிச்சைக்கு டெல்லிக்கு (Delhi) அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவித்தனர். அவர் திங்கள்கிழமை (செப்டம்பர் 28) காலை எய்ம்ஸுக்கு அனுப்பப்பட்டார்.

பி.டி.ஐ படி, தனக்கு நடந்த கொடுமையை அந்தப் பெண் தடுக்க முற்பட்டதால், குற்றவாளிகள் அவரது கழுத்தை நெரிக்க முயன்றனர். அவர்களின் இந்த முயற்சியின் போது, அப்பெண் தன் நாக்கையும் கடித்துக்கொண்டதால், நாவில் கடுமையான வெட்டுக்கு ஆளானார்.

அலிகார் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், பெண்ணின் கால்கள் முற்றிலுமாக முடங்கியிருந்ததாவும்,  கைகள் ஓரளவு முடங்கியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் இப்போது IPC-ன் பிரிவு (IPC Section) 302 (கொலை) இன் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஹத்ராஸ் எஸ்.பி. தெரிவித்தார்.

ALSO READ: 90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 33 வயது இளைஞன்: மனித உருவில் மிருகங்கள் உலவும் உலகம்!!

பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த செயலை கடுமையாக கண்டித்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கோரி வருகின்றன. இந்த சம்பவம் கொடூரமான டெல்லி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார (Gangrape) சம்பவத்தை மீண்டும் நம் கண் முன் கொண்டு வந்துள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை எதுவும் மாறவில்லை. என்ன சட்டம் வந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், நான் நினைத்தை செய்வேன் என்ற வீராப்புடன் மனசாட்சியை விற்று விட்டு வீதி வீதியாய் அலையும் நபர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கு யார் காரணம்? வீட்டுச் சூழலா, சமூக சீர்கேடா, தனி மனித ஒழுக்கம் என்பது மறைந்து விட்டதா? நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?

இத்தனை கேள்விகளுக்கும் பதிலை நம்மால் தேட முடியுமா? அப்படி தேடி நாம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடாதா?

பெண்ணே…. விடைகள் கண்டறியப்படும், தீர்வுகள் கூட பிறக்கலாம். ஆனால், அது வரை நீதான் உன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீ பச்சிளங்குழந்தையோ, பொக்கைப் பல் பாட்டியோ, சீரழிக்க நினைப்பவனுக்கு, நீ ஒரு உடல் மட்டுமே. ஆகையால், உன்னை நீதான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது கயவர்கள் உலா வரும் உலகம், கண்ணியத்தை எதிர்பார்க்காதே. இது மனித உருவில் மிருகங்கள் அலையும் உலகம், மயங்கி விடாதே. இது, நண்பன் என்ற போர்வையில் நரிகள் நடமாடும் உலகம். நட்பின் போர்வையில் நெருங்கினாலும் நம்பி விடாதே.

ALSO READ: Coimbatore Horror: பெண்ணே ஜாக்கிரதை, நண்பன் என்ற பெயரில் நரிகள் நடமாடும் உலகம் இது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News