Wow…. Flight book செய்தால் 99 ரூபாயில் doctor consultation கிடைக்கும்!!

உள்நாட்டு விமான நிறுவனங்களான கோ ஏர் (GoAir) மற்றும் இண்டிகோ (IndiGo) ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2020, 07:06 PM IST
  • GoAir விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், வெறும் ரூ .99 க்கு மருத்துவரிடம் இருந்து ஆலோசனை பெறலாம்.
  • இண்டிகோ ஏர்லைன்சின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ஆன்லைன் மருத்துவர்களிடமிருந்து பெறும் ஆலோசனையில் 200 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
  • GoAir இன் இந்த சலுகை 31 அக்டோபர் 2020 வரை செல்லுபடியாகும்.
Wow…. Flight book செய்தால் 99 ரூபாயில் doctor consultation கிடைக்கும்!! title=

உள்நாட்டு விமான நிறுவனங்களான கோ ஏர் (GoAir) மற்றும் இண்டிகோ (IndiGo) ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளன. இதன் படி, நீங்கள் GoAir விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், நாட்டின் முக்கிய மருத்துவமனைகளின் மருத்துவரிடம் இருந்து வெறும் ரூ .99 க்கு ஆலோசனை பெறும் சலுகையைப் பெறலாம்.

இதேபோல், நீங்கள் இண்டிகோ ஏர்லைன்சின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ஆன்லைன் மருத்துவர்களிடமிருந்து பெறும் ஆன்லைன் ஆலோசனையில் 200 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

GoAir இன் சலுகையை இப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்

• இதில், GoAir இன் வாடிக்கையாளர்கள் MFine செயலியை பதிவிறக்கம் செய்து சைன் அப் செய்யலாம் அல்லது இந்த சலுகையைப் பயன்படுத்த நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் செல்லாம்.

• இங்கே நீங்கள் உங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினை / அறிகுறி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

• பின்னர் இங்கே ஒரு மருத்துவரைத் தேர்ந்தெடுத்து ஆலோசனையைத் தொடங்கவும்.

• உங்கள் உடல்நலக் கவலைகள் அல்லது அறிகுறிகளைக் குறிப்பிட்ட பிறகு நீங்கள் கட்டணப் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.

• இங்கே கட்டணம் செலுத்தும் பக்கத்தில் இருக்கும் default குறியீட்டை அகற்றி இங்கே MFGOAIRCN குறியீட்டை உள்ளிடவும்.

• மருத்துவருடனான ஆலோசனை சேட், ஆடியோ அல்லது வீடியோ மூலம் நடக்கும்.

• இறுதியாக, நீங்கள் ஆன்லைன் ப்ரிஸ்க்ரிப்ஷனையும் பெற்றுக் கொள்ளலாம்.

• இதில் ஐந்து நாட்களுக்கு இலவச follow-up கிடைக்கும்.

ALSO READ: Luggage அதிகமாக உள்ளதா? கவலை வேண்டாம்: Railway உங்கள் லக்கேஜை கொண்டு வந்து சேர்க்கும்!!

Offer-ன் validity

GoAir இன் இந்த சலுகை 31 அக்டோபர் 2020 வரை செல்லுபடியாகும். இதில், வாடிக்கையாளர்கள் ரூ .599 க்கு முழு உடல் செக்-அப் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

IndiGo-வின் Offer

இண்டிகோ ஏர்லைன்சில் விமானத்தை முன்பதிவு செய்தால், ​​நீங்கள் MediBuddy மற்றும் DocsApp செயலியில் ஆன்லைன் மருத்துவர் ஆலோசனை சேவையைப் பெறலாம். இதற்காகும் கட்டணத்தில் 200 சலுகையை நீங்கள் பெறலாம்.

இந்த சலுகை 31 மார்ச் 2021 வரை செல்லுபடியாகும். இதில், டிக்கெட்டுகளை இண்டிகோவின் வலைத்தளம் அல்லது செயலியில் பதிவு செய்யலாம். MediBuddy மற்றும் DocsApp செயலியில் ஆலோசனைக்கு முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த சலுகைக்காக, இண்டிகோ கூப்பன் குறியீட்டை வெளியிடும். இது வாடிக்கையாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். இந்த சலுகை தொடர்பான தகவல்களுக்கு வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் ஐடி- partnerssupport@docsapp.in அல்லது 08039512340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ALSO READ: பெண்களுக்கு சூப்பர் பரிசசை வழங்கினார் பியூஷ் கோயல், இந்த பெரிய தள்ளுபடி அறிவிப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News