15 sec-க்குள் வட்டியற்ற கடனில் பொருட்களை வாங்கலாம்: முழு விவரம் உள்ளே

பல்வேறு வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் 95 சதவிகித கவரேஜுடன், பிராண்ட் ஈ.எம்.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது என்று M-Swipe கூறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 04:31 PM IST
  • 15 வினாடிகளுக்குள் வட்டியற்ற கடன் பெறுவதற்கான வசதி.
  • இப்போது பல புதிய நிறுவனங்கள் நுகர்வோருக்கு Buy now, pay later ஆப்ஷனை வழங்கி வருகின்றன.
  • அதன் ப்ரீபெய்ட் மணி பேக் கார்டையும் வெளியிடுகிறது M-Swipe.
15 sec-க்குள் வட்டியற்ற கடனில் பொருட்களை வாங்கலாம்: முழு விவரம் உள்ளே title=

புதுடெல்லி: பண்டிகை காலம் முடிந்த பின்னரும் நீங்கள் மின்னணு அல்லது வீட்டுப் பொருட்களை வாங்கத் திட்டமிட்டிருந்தால், உங்கள் கடன் 15 வினாடிகளில் வட்டி இல்லாமல் செயல்படுத்தப்படும். இதை நீங்கள் நோ காஸ்ட் EMI முறையில் திரும்பி செலுத்தலாம்.

நுகர்வோர் தேவை அதிகரித்த பிறகு, இப்போது பல புதிய நிறுவனங்களும் நுகர்வோருக்கு, அப்போது வாங்கி பின்னர் பணம் செலுத்தும் (Buy now, pay later) ஆப்ஷனை வழங்கி வருகின்றன.

M-Swipe இந்த சலுகையை அறிமுகப்படுத்தியது

பாயிண்ட்-ஆஃப்-சேல் நிறுவனமான M-Swipe, 15 வினாடிகளுக்குள், வர்த்தகர்களுக்கு பூஜ்ஜிய வட்டிக்கு EMI பெறும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. இது சிறு வணிகர்களுக்கு தங்கள் பொருட்களை விற்க மிகவும் உதவியாக இருக்கும். இதற்காக, நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ‘Brand EMI’-ஐ லாஞ்ச் செய்துள்ளது.

பல்வேறு வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் 95 சதவிகித கவரேஜுடன், பிராண்ட் ஈ.எம்.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது என்று M-Swipe கூறுகிறது.

பெரும்பாலும் செக்-அவுட் செய்யும்போது, தேவையான EMI விருப்பங்கள் இல்லாததால் பொருட்கள் வாங்குவது தொடர்பான முடிவில் வாடிக்கையாளர்கள் அதிகம் யோசிக்க வேண்டி இருக்கிறது, இதனால் தாமதம் ஏற்படுகிறது.

ALSO READ: Whatsapp-பிலேயே fixed deposit ஓப்பன் செய்யும் வசதியை அளிக்கிறது இந்த வங்கி

இந்த பொருட்களுக்கு உடனடி கடன் வழங்கப்படும்

மொபைல், நுகர்வோர் பொருட்கள், கல்வி, சுகாதாரம், தளபாடங்கள், ஆரோக்கியம் மற்றும் சொகுசு பிரிவுகளில் பொருட்களை வாங்க கடைக்கு வரும் நுகர்வோருக்கு Brand EMI-க்கான ஆப்ஷன் கடை மூலம் வழங்கப்படும். இதன் மூலம், மக்கள் தங்களுக்கு பிடித்த மற்றும் முக்கியமான பொருட்களை வட்டியின்றி எளிதாக தவணைகளில் வாங்க முடியும். M-Swipe, இந்தியாவில் SME-க்காக முழு அளவிலான டிஜிட்டல் கட்டண தீர்வுகளைக் கொண்ட ஒரே நிறுவனமாகும்.

இதில் UPI QR, NFC அடிப்படையிலான Tap and Pay, POS மற்றும் கட்டண இணைப்புகள் உள்ளன. 6.75 லட்சம் POS மற்றும் 1.1 மில்லியன் QR வணிகர்களைக் கொண்ட இந்தியாவில் மிகப்பெரிய POS அமைப்பான M-Swipe, அதன் ப்ரீபெய்ட் மணி பேக் (Moneyback) கார்டையும் வெளியிடுகிறது.

ALSO READ: தொழிலில் அதிக லாபம் காண அரசின் இந்தத் திட்டம் உங்களுக்கு உதவும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News