Lockdown இல் ரத்தான டிக்கெட்டுக்கு முழு Refund வழக்கும் இந்த Airlines

கொரோனா நெருக்கடியில் ஊரடங்கு செய்யப்பட்டபோது நீங்களும் இண்டிகோவிடம் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து விமானம் ரத்துசெய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2020, 05:05 PM IST
Lockdown இல் ரத்தான டிக்கெட்டுக்கு முழு Refund வழக்கும் இந்த Airlines title=

புது டெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த விமான பயணிகளுக்கு இண்டிகோ பணத்தை திருப்பித் தரும். இண்டிகோ அத்தகைய பயணிகளுக்கு 2021 ஜனவரி 31 க்குள் முழு கட்டணம் திருப்பித் தரும்.

31 ஜனவரி 2021 க்குள் பணம் திரும்பப்பெறுதல்: இண்டிகோ
கொரோனா வைரஸ் (CoronaVirus) தொற்று நெருக்கடி காரணத்தால் மார்ச் மாதத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விமான பயணிகளின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர், விமானம் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு பதிலாக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் 'கிரெடிட் ஷெல்' ஒன்றை உருவாக்கியது. இந்த கிரெடிட் ஷெல் அதே பயணிகளால் எதிர்கால விமான (Flight) முன்பதிவுக்கு பயன்படுத்தப்படலாம்.

ALSO READ | அதிக பயணிகள் விமானத்தில் பயணிக்க முடியாது! அரசின் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
ஆனால் அக்டோபரில், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மார்ச் 2021 க்குள் பயணிகளின் முழு பணத்தையும் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 25 முதல் மே 24 வரையிலான பயணத்திற்கான முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட மூன்று வாரங்களுக்குள் திருப்பித் தரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Refundக்கு பயணம் ரெடி: இண்டிகோ
சுமார் 1,000 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான பணிகளை முடித்துவிட்டதாக இண்டிகோ (Indigo) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவை பயணிகளுக்கு திருப்பித் தரப்படும் தொகையில் 90 சதவீதம் ஆகும். ஊரடங்கு செய்யப்பட்டதால் மாத இறுதியில் விமானத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோன்ஜோய் தத்தா தெரிவித்தார். நாங்கள் பணப்புழக்கத்தை நிறுத்தியதால், பயணிகளின் பணத்தை எங்களால் திருப்பித் தர முடியவில்லை.

ALSO READ | அதிக பொருட்களுடன் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு கெட்ட செய்தி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News