Panorama: 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’ & ‘தேன்’

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு அசுரன் மற்றும் தேன் ஆகிய இரு தமிழ் திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2020, 10:49 PM IST
  • 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறும்
  • தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் பனோரமாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • பல விருதுகளைப் பெற்ற தேன் திரைப்படமும் பனோராவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
Panorama: 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’ & ‘தேன்’ title=

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் பனோரமா (Panorama) பிரிவில் இடம் பெறுகிறது. இது, தனுஷ் ரசிகர்களின் கொண்ட்டாட்டத்தை அதிகரித்துள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் வெற்றி மாறன் இயக்கிய திரைப்படம் அசுரன். 2020 இந்திய பனோரமாவில் வெளியிடுவதற்கு, அசுரன் மற்றும் தேன் ஆகிய இரு தமிழ் திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

கோவாவில் நடைபெறும் 51 வது சர்வதேச திரைப்பட விழாவில், கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் (Movie), அசுரன் (Asuran) திரைப்படமும் பங்கேற்கின்றன.  
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடைபெறவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பெரிய திரையில் காட்டப்படும். 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Also Read | இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா

தேர்வு குழுவின் தலைவராக புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஜான் மேத்யூ மத்தான் (John Mathew Matthan) இருந்தார். நடன இயக்குனர் கலா உட்பட திரைப்பட துறையை சேர்ந்த 12 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.  இந்தியன் பனோரமா (Panorama) பிரிவில் இத்திரைப்படங்கள் திரையிடப்படும். 

அசுரன் (Asuran) திரைப்படம், 2019 இல் வெளிவந்தது. வெற்றிமாறன் (Vetri Maran) எழுதி இயக்கிய அசுரன் படத்தில், அசுர அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் தனுஷ் (Dhanush). பிரபல நடிகை மஞ்சுவாரியரின் முதல் தமிழ் திரைப்படம் இது. கலைப்புலி எஸ். தானு தயாரித்திருக்கும் அசுரனுக்கு ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற  கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தேன்’. இந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பல்வேறு வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Hollywood படத்தில் Avengers குழுவுடன் இணைகிறார் Dhanush: ரசிகர்கள் கொண்டாட்டம்

உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தேன்’. தருண் குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் அபர்நிதி அவருக்கு ஜோடி சேர்ந்திருக்கிறார். அனுஸ்ரீ, பாவா லட்சுமணன், கயல் தேவராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News