Rajinikanth-இன் அண்ணாத்தே படபிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?

ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படபிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரியில் படபிடிப்பு தொடங்காது என்று தெரிகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2021, 04:41 PM IST
  • அண்ணாத்தே படபிடிப்பு எப்போது தொடங்கும்?
  • ரஜினியின் மருத்துவ்ர்கள் சொல்வது என்ன?
  • இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் ரிலீசாகுமா?
Rajinikanth-இன் அண்ணாத்தே படபிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?   title=

ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்குவது என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்து போன நிலையில், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஹைதராபாதில் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், பணியில் இருந்த படப்பிடிப்புக் குழுவினரில் எட்டு உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட்தை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

அதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அரசியல் (Politics) பிரவேசமே முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அவர் மீண்டும் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | Top 10 Box Office வசூல் படங்களின் பட்டியலில் நுழைந்தது தளபது விஜய்யின் #Master!!

ரஜினிகாந்த் 2021இல் மே மாதத்தில் தான் அண்ணாத்தே (Annaatthe) திரைப்பட படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. எனவே, தயாரிப்பாளர்கள் எந்த நேரத்திலும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை. 2019 டிசம்பர் முதல் படபிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை முடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்த்து. ஆனால் கொரோனா பாதிப்பால் நிலைமை மாறிவிட்டது.  

குஷ்பு (Kushbu), நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் ரஜினியின் அண்ணாத்தே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருந்த நடிகர் நடிகர் ரஜினிகாந்த் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்கும்படி கேட்டுள்ளனர்.

Also Read | வைரலாகும் குழந்தை முகத்துடன் இருக்கும் தல அஜித்-ன் லேட்டஸ்ட் புகைப்படம்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News