தளபதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மாஸ்டர் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 03:27 PM IST
தளபதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா (Covid-19) காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த விஜய் (Vijay) ரசிகர்கள் படத்தின் டீசரையாவது வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ | விஜயின் மாஸ்டர் படம் குறித்து புதிய அப்டேட் என்ன தெரியுமா?

இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மாஸ்டர் (Master) படத்தின் டீசர் தற்போது 5 கோடி பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிட உள்ளதாக மாஸ்டர் படத்தின் குழு ட்விட்டரில் அறிவித்திருந்தது. அந்த வகையில் ‘மாஸ்டர் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

முன்னதாக, OTT நிறுவனங்கள் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டிய போதும் படத்தின் தயாரிப்பாளர் லலித் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். தமிழகத் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட் இங்கே, ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் இது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை (Edappadi Palaniswami) விஜய் நேரடியாக சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்தார். நடிகர் விஜய்யின் கோரிக்கை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ....

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News