Test Jersey அணிந்து படத்தைப் பகிர்ந்தார் T.Natarajan: டெஸ்டில் ஆடுவாரா மாட்டாரா?

நடராஜன் ஆஸ்திரேலியாவில் இதுவரை 50 ஓவர் மற்றும் டி-20 போட்டிகளில் தனது பந்துவீச்சில் மிகுதியான உறுதியையும் மன வலிமையையும் காட்டியுள்ளார்.

Last Updated : Jan 5, 2021, 12:50 PM IST
  • டி. நடராஜன் தனது டெஸ்ட் ஜெர்சியை அணிந்த படி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
  • அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவது இன்னும் உறுதியாகவில்லை.
  • டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
Test Jersey அணிந்து படத்தைப் பகிர்ந்தார் T.Natarajan: டெஸ்டில் ஆடுவாரா மாட்டாரா? title=

அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையில் ஒரு சமயத்தில் வாய்ப்புகள் வந்து குவியும். அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் வாழ்வின் உச்சியை எட்டுகிறார்கள். தமிழக கிரிக்கெட் வீர்ர நடராஜனின் வாழ்வில் அப்படிப்பட்ட சமயம்தான் இது.

நல்ல திறமை கொண்ட இவரது வாழ்வில் பல விதங்களில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவரும் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டி நடராஜனின் திறமையை IPL 2020-யிலிருந்து உலகம் காணத் தொடங்கியது. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியில் ஆடிய நடராஜன், அந்த தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் போட்ட அபாரமான யார்கர்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன.

தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில், அவர் இந்திய அணியில் (Team India) அறிமுகமானார். ஒரு நாள் போட்டிகளில் நவ்தீப் சைனிக்கும் T20 போட்டிகளில் வருண் சக்ரவர்த்திக்கும் பதிலாக அவர் களம் இறங்கினார். அவர் தனது முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 போட்டிகளில் அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையைப் பெற்றார். தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், காயங்கள் காரணமாக உமேஷ் யாதவ் ஆட முடியாத நிலையில், மூன்றாவது டெஸ்டுக்கு முன்னர், மூன்றாவது சீமருக்கான போட்டி, நடராஜன் (T Natarajan), நவ்தீப் மற்றும் ஷர்துல் தாகூருக்கு இடையில் உள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு முன்னர், நடராஜன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 05) காலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தனது டெஸ்ட் ஜெர்சியை அணிந்த படி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவர் அதில், "வெள்ளை ஜெர்சி அணியும் ஒரு பெருமையான தருணம். அடுத்த கட்ட சவால்களுக்கு தயார்” என எழுதியுள்ளார்.

ALSO READ: ‘நடராஜனின் அற்புத கதை உத்வேகம் அளிக்கிறது’: T Natarajan-ஐ பாராட்டிய முன்னாள் கிரிக்கெட்டர்

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறுவதை இலக்காகக் கொண்டுள்ள அஜிங்கியா ரஹானே (Ajinkya Rahane) தலைமையிலான இந்திய அணிக்கு நடராஜன் ஒரு துருப்பு சீட்டாக இருக்கக்கூடும். எனினும், அவரது SRH கேப்டன் டேவிட் வார்னர் (David Warner) டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்து அவ்வளவு உறுதியாக இல்லை. 50 ஓவர் மற்றும் டி-20 போட்டிகளில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட நடராஜனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வார்னர், சமீபத்தில் ANI இடம், "எனக்கு அவரது டெஸ்ட் திறமையைப் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. நீங்கள் அனைவரும் அவரது ரஞ்சி கோப்பை புள்ளிவிவரங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிக்கான லைன் அன்ட் லெங்க்த் திறமை அவருக்கு உள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அதே திறனோடு அவரால் அடுத்தடுத்த ஓவர்களை போட முடியுமா என்பதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

நடராஜன் ஆஸ்திரேலியாவில் இதுவரை வரையறுக்கப்பட்ட ஓவர்களில் தனது பந்துவீச்சில் மிகுதியான உறுதியையும் மன வலிமையையும் காட்டியுள்ளார். ஆகவே, வியாழக்கிழமை (ஜனவரி 07) முதல் துவங்கவுள்ள அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இரண்டாவது டெஸ்டில் இந்தியா பெற்ற எட்டு விக்கெட் வெற்றியைத் தொடர்ந்து இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 

ALSO READ: IND Vs Aus: Sydney-ல் தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடக்கூடும் தமிழக வீரர் T.Natarajan

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News