DMK தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது

தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் "தேர்தல் அறிக்கை" (DMK Election Manifesto) தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2020, 10:23 AM IST
  • திமுகவின் "தேர்தல் அறிக்கை" (DMK Election Manifesto) தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம தொடங்கியது.
  • திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு (T. R. Baalu) தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம் .
  • இந்த குழு திமுகவுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பார்கள்.
DMK தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது title=

DMK election manifesto; TN Assembly Electuon 2021: அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (Assembly Electuon 2021) வார உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு வரத் தயாராக உள்ளது. இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் "தேர்தல் அறிக்கை" (DMK Election Manifesto) தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம்  திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு (T. R. Baalu) தலைமையில் நடைபெறவுள்ளது.

ஒரு கட்சிக்கு தேர்தல் அறிக்கை தான் மிக முக்கியம். அந்த வகையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் (MK Stalin) சமர்ப்பிப்பார்கள்.

ALSO READ |  ஊழலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் தப்பா முடியாது: MKS

மறுபுறம், அதிமுக (AIADMK) பலமாக உள்ளது. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து செயல்படும். விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து அறிவிக்கப்பட உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News