அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது டெல்லி மற்றும் வாரணாசி இடையே இயங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக, இந்த ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2019, 07:15 PM IST
அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம் title=

புதுடில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான "வந்தே பாரத்"தின் வெற்றிகாரமான பயணத்தை தொடர்ந்து, இதுபோன்ற பல ரயில் பெட்டிகளை உருவாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 40 புதிய "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக ரயிவே வட்டாரங்கள் Zee Media -விடம் தெரிவித்தன. 

சமீபத்தில் இந்த ரயில்களை தயாரிப்பதற்காக விடப்பட்ட டெண்டர் சர்ச்சையில் சிக்கியது. இந்த டெண்டடில் வெளிப்படைத்தன்மை அற்றதாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் தலையீட்டிற்குப் பிறகு, "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸ் ரயில்களின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான புதிய டெண்டர் செயல்முறையை ரயில்வே வாரியம் தொடங்கியது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது டெல்லி மற்றும் வாரணாசி இடையே இயங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக, இந்த ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

இந்தியாவில் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. "வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயில்களுக்கு என்ஜின் தனியாக இருக்காது, பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். இது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

"வந்தே பாரத்" ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரயிலை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திரமோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். முதல் பயணமாக டெல்லியில் இருந்து வாரணாசி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News