2100-ல் உலக மக்கள் தொகையில் டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ!!

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது 2100 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை விநியோகத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 12:07 AM IST
  • தற்போதைய கணிப்புகளின்படி, 2100-ல் உலகின் மொத்த மக்கள் தொகை 10 பில்லியனுக்கும் அதிகமாக இருக்ககூடும்.
  • 2100 வாக்கில், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா சீனாவை முந்திவிடும்.
  • இந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் மக்கள் தொகை 73.2 கோடியாகக் குறையும்.
2100-ல் உலக மக்கள் தொகையில் டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ!! title=

புதுடெல்லி: சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது 2100 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை (Population) விநியோகத்தை கோடிட்டுக் காட்டுகிறது. 80 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் எந்த 10 நாடுகளில் மிக அதிக மக்கள் தொகை இருக்கும் என்பதை இது காட்டுகிறது. மேலும், தற்போதைய கணிப்புகளின்படி, அந்த நேரத்தில் உலகின் மொத்த மக்கள் தொகை (World Population) 10 பில்லியனுக்கும் அதிகமாக இருக்ககூடும். IHME-ன் அறிக்கையின் படி, 2100 க்குள் எந்த நாட்டில் எவ்வளவு மக்கள் தொகை இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ALSO READ: இந்தியாவில் விரைவில் கிடைக்கும் COVID மருந்து: Reda-x-ஐ வெளியிடவுள்ளது Dr. Reddys

இந்தியா

2100 வாக்கில், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா சீனாவை முந்திவிடும். நாட்டில் 1.09 பில்லியன் மக்கள் இருப்பார்கள்.

நைஜீரியா

2100 க்குள் நைஜீரியாவில் மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இங்கு மக்கள் தொகை 791 மில்லியனாக அதாவது 79.1 கோடியாக இருக்கும். இப்போது இங்குள்ள மக்கள் தொகை 20.6 கோடியாகும்.

சீனா

சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 1.4 பில்லியனாக உள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் மக்கள் தொகை (China Population) 73.2 கோடியாகக் குறைக்கப்படும்.

அமெரிக்கா

அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 32.5 கோடியாக உள்ளது. இது 2100 க்குள் 33.6 கோடியாக உயரும்.

பாகிஸ்தான்

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 5 வது இடத்தில் இருக்கும். தற்போதுள்ள 21.4 கோடி மக்கள் தொகை 24.8 கோடியாக அதிகரிக்கும்.

காங்கோ

காங்கோ ஜனநாயக குடியரசின் மக்கள் தொகை 2100 க்குள் 24.6 கோடியாக இருக்கும்.

இந்தோனேசியா

தற்போது, ​​உலகின் நான்காவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தோனேசியா 7 வது இடத்திற்குச் செல்லும். இங்கு 25.8 கோடி மக்கள் வாழ்கின்றனர். அதன் எண்ணிக்கை 22.9 கோடியாகக் குறையும்.

எத்தியோப்பியா

இந்த நாடு இன்னும் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் 10 நாடுகளின் வரிசையில் இல்லை. ஆனால் 2100 வாக்கில் இது இந்த வரிசையில் இருக்கும். இங்குள்ள மக்கள் தொகை 22.3 கோடியாக இருக்கும்.

எகிப்து

இந்த நூற்றாண்டின் இறுதியில் எகிப்தில் 19.9 கோடி மக்கள் தொகை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தான்சானியா

இந்த நூற்றாண்டின் இறுதியில் தான்சானியா 18.6 கோடி மக்களைக் கொண்டிருக்கும். 

ALSO READ: ரஷ்யாவில் மக்களுக்கு COVID Vaccine தயார்: இந்தியாவிலும் ஒரு நற்செய்தி!!

Trending News