நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், பெயர் வைக்கச் சொல்லி கொடுத்த ஆண் குழந்தைக்கு 'வெண்ணிலா' என சீமான் பெயர் வைத்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது
Naam Tamilar Katchi: தேர்தல் முன்பே வரும் என்கிறார்கள் நமக்கு எப்பொழுது வந்தாலும் கவலை இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ராஜாஜி புரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரை, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ள பகுதிகளில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனக்கூறி திமுகவினர் தடுத்ததால் இருதரப்பினருக்கிடைய கைகலப்பு ஏற்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசுவின் தலையில் காயம் ஏற்பட்டது.இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாதிக்கப்பட்ட அன்பு தென்னரசுவிடம் நமது அரசியல் பிரிவு ஆசிரியர் கலைச்செல்வி சரவணம் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலை தற்போது காணலாம்.
Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
நிலங்களை மட்டும் தமிழர்களிடம் கையகப்படுத்திவிட்டு வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கில் அனைத்து நிகழ்வுகளையும் தமிழில் நடத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டுமென சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.