LIC IPO Latest News: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் IPO வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் LIC பாலிசிதாரர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ .2.27 லட்சம் கோடியில் தமிழகத்திற்கு அதிகபட்சமாக நிதி கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளன.
பட்ஜெட் 2021 நமது எரிபொருள் விலைகளை அதிகரிக்குமா என்ற கேள்வி சாதாரண மக்களின் மனதில் எழுந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
நடுத்தர வர்க்கத்தினரால் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான வருமான வரி ஸ்லாப் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் எதையும் குறிப்பிடவில்லை
மோடி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டு 2021 ஆண்டின் மொத்த செலவு ரூ .34.50 லட்சம் கோடி என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இது முதலில் மதிப்பிடப்பட்ட ரூ. 30.42 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்ட, இந்தியாவின் மிக முக்கிய துறையான ரயில்வே துறையை புதுப்பிக்கும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பசுமை ரயில்வே' திட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்தத் துறைக்கான மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்ஜெட்டுக்கு முன் ஒரு சிறந்த செய்தி உள்ளது. ஜனவரி மாத GST Collection புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன, இந்த முறை எண்ணிக்கை ரூ .1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. GST அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஜனவரி வசூல் மிக அதிகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.