பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோலாகலம் பூண்டுள்ள நிலையில், அங்கு செல்ல முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
பழனி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் படிப்பாதை மற்றும் யானை பாதை உள் பிரகாரம் வெளிப்பிரகாரம் பகுதிகளில் கலாகர்சனம் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Palani Kumbhabhishekham In Tamil: பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக தெய்வத்தமிழ் பேரவை அறிவித்துள்ளது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்கநகைகளை திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள் குறித்து புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும் என திருநங்கைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது!