CM Vijay Mayor Priya Meet : தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்று 10 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை சென்னை மேயர் பிரியா அவரை நேரில் வந்து சந்திக்காதது பெரும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
தன் மீதான அரசியல் விமர்சனங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் பேசுகையில், "தேர்தல் முடிவுக்குப் பின் ஸ்டாலினை சந்தித்தது நட்பு ரீதியானது மட்டுமே; விஜய் சிஎம் ஆவதைத் தடுக்க நான் தூது சென்றதாகக் கூறுவது தவறானது. ஏர்போர்ட்டில் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற விமர்சனத்தில் உண்மையில்லை, ஏற்கனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்திவிட்டேன்" என்றார். மேலும், "அரசியலில் இருந்து நான் விலகிவிட்டதால் விஜய் மீது பொறாமைப்பட அவசியமில்லை. எனக்கும் அவருக்கும் 25 ஆண்டுகள் ஜெனரேஷன் கேப் உள்ளது. பாஜக, திமுக, அதிமுக எனப் பெரிய சக்திகளை எதிர்த்து 52 வயதில் தனி ஆளாக விஜய் சாதித்தது சினிமா உலகிற்கு ஆச்சரியமும் சந்தோஷமும் அளிக்கிறது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என ரஜினி தெளிவுபடுத்தியுள்ளார்.
Actor Rajinikanth : விஜய் முதலமைச்சராவதை தடுக்கவே நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினை சந்தித்ததாகவும், திமுக - அதிமுக இணைப்பு குறித்து ஸ்டாலினிடம் அவர் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு ரஜினிகாந்த் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
TVK Minister Rajmohan Latest News: தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகனின் 'ரூ. 2 கோடி சொத்து மதிப்பு' மற்றும் 'அங்கீகாரமற்ற போலி டிப்ளோமா சான்றிதழ்' விவகாரங்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
CM Vijay: முதலமைச்சர் விஜய்யை, மநீம தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். அப்போது அவர் விஜய்க்கு இரண்டு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளார். அந்த புத்தகங்கள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
Minister CTR Nirmal Kumar : விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்ததை இங்கு விரிவாக காணலாம்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் செய்வது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உடனடி பணிநீக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் திடீர் ஆய்வுகள் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடமிருந்து வரும் புகார்களை நேரடியாக கண்காணிக்க தனி குழுவும் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
TN CM Vijay Routine : சமீபத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், தினமும் வீட்டிலிருந்து மதிய உணவை எடுத்துக்கொண்டு வருவதாக கூறி அதிகாரிகள் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Vijay Vs Udhayanidhi Stalin Clash : சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விஷயங்களுக்கு, முதல்வர் விஜய் பல மணி நேரம் கழித்து பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
Who Is Jagadish Palanisamy : தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகம் கட்சி விஜய்க்கு சுற்று துணையாக அவரை சுற்றி ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களும் ஒருவர், ஜெகதீஷ். இவர் யார்? விஜய்க்கும் இவருக்குமான பந்தம் எப்போது தொடங்கியது? இது குறித்த முழு விபரத்தை இங்கு பார்ப்போம்.
Udhayanidhi Stalin Book Vijay : தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜேசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது ஒரு புத்தகத்தை உதயநிதி முதல்வர் விஜய்க்கு பரிசாக வழங்கனார். அது என்ன புத்தகம்? எங்கு கிடைக்கும், எப்படி படிக்கலாம்? விலை என்ன..? என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
முதலமைச்சர் விஜய் தான் வெற்றிபெற்ற திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொற்பேற்றார். இந்த தேர்தலில் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றிபெற்றால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், முதலமைச்சர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவார் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்பார்.
TN 200 Units Free Electricity: தவெக தலைவரும், முதல்வருமான விஜய் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டுள்ளார். 200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம், கிடைக்காது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Trisha in Vijay Oath Ceremony: தமிழகத்தின் 13 வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவி இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகை திரிஷா கலந்து கொண்டுள்ளார். விஜயின் பதிவிற்கு விழாவில் முதல் வரிசையில் திரிஷாக்கு அமர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், ஆதரவு 120 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
TVK Vijay To Form Government : தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க விஜய்க்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, விஜய்யின் பதவியேற்பு விழா ஏற்பாடு தற்போது தடபுடலாக ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 இடங்களைப் பெற்று வெற்றி பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நடிகரான விஜய் கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் எப்படி இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பது பலர் அது கேள்வியாக இருக்கிறது. இந்த சமயத்தில்தான் அரசியலுக்கு வர இருந்த ரஜினி பற்றியும், அரசியலுக்கு வந்தும் பெரிய இடத்தை பிடிக்க முடியாத கமலை பற்றியும் மக்கள் பேசி வருகின்றனர்.