TN Bye Elections News: தமிழகத்தில் திருச்சி (கிழக்கு), பெருந்துறை, மதுராந்தகம் (SC), தாராபுரம் (SC), மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், மாதிரி நடத்தை விதிமுறைகளை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம்.
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வருகை தரும் நிலையில் சில முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் ஏற்பட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு காவல்துறை தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது நடக்க வாய்ப்புள்ளது, வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றிபெற்றால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.
Trichy East Election Result 2026 : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் 2026. தவெக தலைவர் விஜய், திமுகவின் இனிகோ இருதயராஜ் இடையிலான பலப்பரீட்சை முடிவுகளை இங்கே காணுங்கள்.
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.