Pudukottai Constituency Latest News: கூட்டணி கட்சிகள் எல்லாரும் ஒருங்கிணைந்து இங்கு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் இதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்ற நம்பிக்கையில் நான் செல்கின்றேன் என்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புதுக்கோட்டையில் பேசி உள்ளார்.

Piyush Goyal, Pudukottai Constituency Latest News: புதுக்கோட்டை மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டு ஆலோசனையை வழங்கினார்
அப்போது புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றிக்கு, அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பின், செய்தியாளரிடம் பேசிய அவர், "கூட்டணி கட்சிகள் எல்லாரும் ஒருங்கிணைந்து இங்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். அதனால் நமது (NDA) வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்ற நம்பிக்கையில் நான் செல்கின்றேன்.
மொத்தமாக ஊழல் மட்டும் தான் திமுக அரசு செய்து கொண்டு இருக்கிறது. ஒரு அருமையான மாநிலத்தை கெடுத்து விட்டார்கள். புதுக்கோட்டை மக்கள் உதயநிதியை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக சனாதனம் பற்றி பேசும் தமிழ் மக்களையும், தமிழ் உறவுகளையும் புண்படுத்திவிட்டார்.
துக்கோட்டையில், திரு. N. ராமச்சந்திரன் அவர்கள் போட்டியிடும் தொகுதியில், பூத் பிரமுகர்களுடன் கலந்துரையாடினேன்.
— Piyush Goyal (@PiyushGoyal) April 12, 2026
இளைஞர்களுக்காக அவர் மேற்கொண்டு வரும் இடைவிடாத முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. இந்தத் தொகுதியின் மக்கள் அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்குவார்கள் என்ற… pic.twitter.com/HSzBF5rTvD
நெல் கொள்முதல் பொறுத்தவரையில் காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட, மத்திய பாஜக ஆட்சியில் 500 மடங்கு அதிகமாக கொள்முதல் செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 10 லட்சம் டன் மட்டுமே தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைந்த உடன தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதியில் இருந்து 48 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை தொகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நமது சகோதரிகளும் திமுக ஆட்சியில் பயத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியிருப்பதால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை மிக மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின், சபரீசன், கனிமொழி எல்லாரும் எல்லா சமயத்திலும் ஊழல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் மட்டும்தான் பிசியாக இருக்கிறார்கள். போதும் நடந்தது, நடந்துவிட்டது. இனியும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள், அனைவரும் உங்களை புறக்கணிக்கப் போகிறார்கள்.
ஏப்ரல் 23ஆம் தேதி திமுகவை வீட்டிற்கு அனுப்ப போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சி மலரப் போகிறது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க உள்ளார். ஏன் தமிழை தமிழ் மக்களுக்கு சொல்லித் தரவில்லை. குறிப்பாக ஸ்டாலின் குடும்பம் நடத்துகின்ற பள்ளியில்
தமிழை தமிழ் மக்களுக்கு சொல்லித் தரவில்லை. ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள், அவர் நிச்சயம் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.
புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது. அதிமுக 2001, 2006, 2012 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. 2011இல் மட்டும் சிபிஐ வென்றது. திமுக 5 முறை இங்கு வென்றுள்ளது. கடந்த 2016, 2021 தேர்தல்களில் திமுகவே வென்றுள்ளது. இந்த முறையும் திமுக சிட்டிங் எம்எல்ஏ முத்துராஜா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் ராமசந்திரன், நாம் தமிழர் கட்சி எழிலரசி, தமிழக வெற்றிக் கழகம் கே.எம். ஷரீஃப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ