விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், தற்போது இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை பற்றி பேசிய தவெக தொண்டர் ஒருவர், தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனதை அடுத்து, பலர் இது குறித்து அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். இப்படி படம் லீக் ஆனது பிறரை விட தவெக தொண்டர்களுக்கு மிகவும் பர்சனலான விஷயமாக இருக்கின்றது. இதனால், படத்தின் லீக் குறித்து ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசி வருகின்றனர். அதை பற்றி தற்போது ஒரு தவெக தொண்டர் பேசியிருப்பதுதான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
ஜனநாயகன் திரைப்படம்:
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரான விஜய், தனது 30 வருட அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு, இப்போது முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக தெரிவித்திருக்கும் அவர், கடைசியாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படம், தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரி திரைப்படத்திலிருந்து இன்ஸ்பையர் ஆகி எடுத்த படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படத்தை, பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், படத்தை மறு ஆய்வு செய்யாமல் சென்சார் சான்றிதழ் தர மாட்டோம் என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தெரிவித்து விட்டதால், படத்தை இப்போது வரை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறு. இது தேர்தல் சமயம் என்பதால், படத்தை எந்த தேதியில் ரிலீஸ் செய்வது என்று தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் திணறி வந்த நிலையில்தான், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனநாயகன் லீக்:
சமீபத்தில், ஜனநாயகன் திரைப்படத்தின் HD பிரிண்ட், இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில், படத்தில் விஜய்யின் 5 நிமிட இன்ட்ரோ காட்சி வெளியானது. அதன் பிறகு, 3 மணி நேர திரைப்படமும் வெளியாகி விட்டது. இதற்கு யார் காரணம் என்று பெரும் பிரச்சனை நடைப்பெற்று வரும் நிலையில், விஜய் ரசிகர்களான தவெக தொண்டர்கள் கோபமாக பிற கட்சிகளை திட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி, குறிப்பிட்ட ஒரு தொண்டர் பேசியிருக்கும் வீடியோ தற்போது கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.
தொண்டர் பதிவிட்ட வீடியோ:
தவெக கட்சியில் இருக்கும் பிரபலமான தொண்டர்களுள் ஒருவராக இருக்கிறார், கார்த்தி. இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் TrichyKarthiTVK என்று பெயரை வைத்துக்கொண்டு பிரபலமாக இருக்கிறார்.
ஜனநாயகன் படம் லீக் ஆனது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “ரெண்டு சுடிதார், ரெண்டு ப்ரா, ரெண்டு ஸ்டேஃப்ரீ வாங்கி தரோம்..ஜனநாயகன் படத்தை லீக் பண்ண சொன்ன நாயும், லீக் பண்ண நாயும் மாட்டிக்கிட்டு, ரயில்வே ஸ்டேஷன்ல 10 மணிக்கு போய் நில்லுங்க..நல்லா சம்பாதிக்கலாம். ஏண்டா..(ஆபாச வார்த்தை) நாய்ங்களா..ஒருத்தன் கோடிக்கணக்கில் காசை போட்டு படம் எடுப்பான், அந்த படத்தை லீக் பண்ணுவீங்க. நான் சத்தியமா சொல்றேன், ஒரு அம்மாவுக்கும் ஒரு நல்ல அப்பாவுக்கும் பிறந்திருந்தால் ஒருத்தன் நல்லா வளர்ரான்னா அப்டீன்னா ஏதாச்சும் செய்து நம்ம திறமையை காட்டி மேலே வரணும் என்றுதான் பார்ப்பான். எதிர்ல இருக்கவன அழிச்சிட்டு மேலே வரணும்னு நினைக்க மாட்டான்.

இதுல DMK மட்டும் தலையிட்டிருபது தெரிஞ்சிதுன்னு வெச்சிக்கோயேன்..மனசார சாபம் உட்றேன்..சன் பிக்சர்ஸ் - ரெட் ஜெயிண்ட்ஸ் சேர்ந்து ஜனநாயகன விட பல மடங்கு பல கோடி முதலீடு செய்து படம் எடுக்குறீங்கள்ள..அட்லீயையும் அல்லு அர்ஜுனையும் வைத்து..அந்த முழு படமும் லீக் ஆகும். ஏன்னா அத எடுக்குறதே விஜய்யின் தம்பி அட்லீதான்” என்று கூறினார். இந்த வீடியோவில் பொறுப்பு துறப்பு என்று தான் எந்த பெண்ணையும் இழிவு படுத்தவில்லை என்று போட்டாலும், இவரது பேச்சு, பெண்களையும் திருநர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் இழிவு படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, பல கண்டண்ட் கிரியேட்டர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இணையவாசிகள் கண்டனம்..
கார்த்தியின் இந்த வீடியோவிற்கு, இணையவாசிகள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் திருநர் சமுதயாத்தை சேர்ந்த மக்கள் இவருடைய பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி, அவர் மீது புகார் கொடுத்து வருகின்றனர். இதற்கு ரிப்ளை செய்யும் விதத்தில், கார்த்தி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், தான் பேசியதை பெண்களுக்கு எதிராக பேசியதாக திமுகவை சேர்ந்தவர்கள் திரித்து பேசுவதாகவும், அவர்களின் வீடியோக்களை முடித்து விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வீடியாே வெளியிட்டு இருக்கிறார். இவரது இந்த பதிவிற்கு எதிராகவும் பல கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
ஏற்கனவே கேஸில் சிக்கியவர்..
தவெகவில் இருந்த வைஷ்ணவி, பின்னர் திமுகவில் இனைந்தார். பின்னர் தவெகவின் செயல்பாடுகளை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார். இதையடுத்து இவருக்கு எதிராக தவெக உறுப்பினர்கள் பலர் ட்ரோல்களை பதிவ்ட்டு வந்தனர். ஒரு கட்டத்தில், தவெகவை சேர்ந்த இந்த கார்த்தி “ஒரு சில பெண்களை பார்த்தால் மட்டும் கண்டம் துண்டமாக வெட்டி கொ*** தோன்றும்” என்று பதிவிட்டார். இதையடுத்து வைஷ்ணவி தனக்கு கார்த்தி கொலை மிரட்டல் விடுவதாக கூறி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கார்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும், இப்போது மீண்டும் அவர் இது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ