ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் கடந்த 2022ம் ஆண்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது மாரடைப்பால் காலமானார். அவரது இறப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் ஷேன் வார்ன் இறந்த ரிசார்ட்டில் இருந்து உடலுறவுக்கான மாத்திரை பாட்டில் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை போலீசார் மறைத்ததாகவும் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
)