தமிழகத்தில் முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது சொந்த வீடு கட்ட நினைக்கும் சாமானியர்களுக்கு  பேரிடியாக இறங்கி உள்ளது. குறிப்பாக ஜல்லி, சாண்ட் ஆகியவற்றின் விலை கிடு கிடுவென உயர்த்தப்பட்டுள்ளதால் கட்டிடம் கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு ரூ.1000 வரை அதிகரித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த அத்தியாவ்சிய பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியையும் பெரிதும்

See more

Recommended Videos