நீட் தேர்வை (NEET-UG 2026) முற்றிலும் ரத்து செய்யக் கோரி தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார். தேசிய தேர்வு முகமையால் (NTA) மே 3, 2026 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட மறுநாளே, முதலமைச்சர் விஜய் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அடுத்தடுத்து நடக்கும் நீட் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள், தேசிய அளவிலான இந்த தேர்வு முறையின் அடிப்படை "கட்டமைப்பு குறைபாடுகளை" (Structural Flaws) வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.