ஆண் குரல்களுக்கு நோ எண்ட்ரி: பெண்ணின் காதில் வினோதம், மிரண்ட டாக்டர்கள்

சீனாவின் சியாமென் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, "ரிவர்ஸ் ஸ்லோப் ஹியரிங் லாஸ்" (Reverse Slope Hearing Loss) என்ற விசித்திரமான மருத்துவ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு நாள் காலை எழுந்தபோது, அவருக்குத் தன் காதலன் உட்பட எந்த ஆண்களின் குரலும் கேட்கவில்லை. ஆனால், பெண்களின் குரல் மட்டும் அவருக்குத் தெளிவாகக் கேட்டுள்ளது. பொதுவாகச் செவித்திறன் குறையும்போது அதிக அதிர்வெண் கொண்ட சத்தங்களே முதலில் கேட்காமல் போகும். ஆனால், இவருக்கு நேர்மாறாகக் குறைந்த அதிர்வெண் (Low-frequency) கொண்ட ஒலிகள் கேட்கவில்லை. ஆண்களின் குரல் குறைந்த அதிர்வெண் கொண்டவை என்பதால், அவரால் அவற்றைக் கேட்க முடியவில்லை. அதேசமயம் அதிக அதிர்வெண் கொண்ட பெண்களின் குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டுள்ளது.

அதிகப்படியான வேலைப்பளு, மன அழுத்தம், தூக்கமின்மை

See more

Recommended Videos