காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்தூரில் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையத் திட்டம் குறித்த பேச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. முதல்வராகும் முன் விஜய் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இப்போது, அதன் தற்போதைய நிலை பற்றி ஆய்வுகளை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் அரசியலுக்கு வந்தவுடன், முதலில் குரல் கொடுத்த பிரச்சினைகளில் பரந்தூர் விமான நிலைய பிரச்சனையும் ஒன்றாகும். பரந்தூரில் விமான நிலையம் கொண்டுவருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார். விமான நிலையத்திற்கு எதிராக நடக்கும் மக்களின் போராட்டத்திற்கு முதல்வர் விஜய்யும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், BMW, TVS உள்ளிட்ட முன்னணி மோட்டார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனும் முதலமைச்சர் ஜோசப்